வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

05 June 2011

மனம் விரும்புதே உன்னை......

மனம் விரும்புதே உன்னை மனம் விரும்புதே...

எனக்குப் மிகவும் பிடித்த பாடல் வரிகள் இவை..

மனம் என்றால் என்ன? அது மனிதனில் எங்கு இருக்கிறது என்று மனதால் மனதின் உதவியுடன் தேடிப்பார்க்கின்றேன். இன்னும் விடைகிடைத்தபாடில்லை.

மனிதனின் வாழ்வே மனதின் தன்மையினால் நிர்ணயிக்கப்படுகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு.

நம் அனைவருக்கும் தான் மனம் இருக்கிறதே.  ஏன் மார்க்கம் கிடைக்கவில்லை.

மனது வைக்கத்தான் மனம் இல்லை. அதனால் மார்க்கமும் நம் வசம் இல்லை.

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?  என்ன செய்வது எனது மனமும் தான் குழம்பிப்போய் கிடக்கிறது.

மனசு சரியில்லை அதான் கொஞ்ச நேரம் சும்மாச்சும் குழப்பிக்கொண்டிருந்தேன்.

மனம் என்பது என்ன? மனம் நமது உயிரின் மற்றுமொரு வடிவம், அதாவது உயிரின் இயல்புநிலை திரிந்த தன்மை தான் மனம் என்பது.

இப்போது சொல்லுங்கள் மனம் எங்கு இருக்கிறது. அட ரொம்ம யோசிக்காதிங்கப்பா.  உயிர் இருக்கும் இடத்தில் தானே மனம் இருக்கிறது.

நன்றாக மாட்டிகிட்டீங்களா.  இப்ப சொல்லுங்க உயிர் எங்கு இருக்கிறது? (பார்த்திபன், வடிவேலு பாணியில் தொடர்ந்து படிக்கவும்)

இதென்னடா வம்பா போச்சு?!

உயிர் எங்க இருக்கிறது?  ஆங்! கண்டுபிடித்துவிட்டேன் தலையில் இருக்கிறது.  தலையில் அடிபட்டாதான் செத்து போயிடறாங்களே? அப்படின்னா உயிர் தலையில தானே இருக்கனும்.

அட முட்டாளே!.  உன் வயித்தில கத்தியால குத்தினா நீ சாகமாட்டீயா?

ஆங்! ஆமா! இல்லை! செத்து தான் போயிடுவேன்.  அப்படின்னா? உயிர் வயித்துலயா இருக்குது.

ஆமா எனக்கொரு சந்தேகம் சில பேர் ஹார்ட் அட்டாக் வந்து சாவறாங்களே ஏன் அவங்களுக்கு உயிர் நெஞ்சில இருக்குமோ?

அப்படின்னா இரு கொஞ்ச நேரம்.

ஏன் என்ன பன்ன போற.  ஏய் எதுக்கு என் மூக்கையும் வாயயையும் பொத்துற, ஐயோ விடுடா, ஏய்.

அப்பாடா கொஞ்ச நேரத்தில உயிர் போயி உயிர் வந்துடுச்சு

ஏம்ப்பா ஏன் இப்படி பண்ற.  நான் உனக்கு என்னப்பா துரோகம் பண்ணேன். என்னை சாகடிக்க பாக்கிற. என்னை உட்ருப்பா நான் இந்த செத்து செத்து விளையாடற ஆட்டத்துக்கே வரலை.

இல்ல நீதான் நெஞ்சில உயிர் இருக்குதுன்னு சொன்னியே.  அதான் வாயையும், மூக்கையும் அடைச்சா உயிரோட இருக்கியான்னு சின்ன டெஸ்ட் பன்னேன்.

இப்ப சொல்லு உயிர் எங்க இருக்கு.

(மனதிற்குள்) அய்யோ குழப்பறானே.  அவ்வ்வ்வ்வ்வ்வ்

அய்யா எனக்கு தெரியலை.  நீயே சொல்லிப்புடு ராசா.

இனி நான்.

உயிர் நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது.  ஆம். நம் உடல் முழுவதும் உயிரோட்டம் நிறைந்துள்ளது.  அதானல் தான் நாம் உயிர் வாழ்கிறோம்.  இந்த உயிரின் ஓட்டம் தடைபடும் போது நமக்கு நிகழ்வதே மரணம்.

உயிரின் மையப்பகுதி நமது மூலாதாரம் என்று சொல்லக்கூடிய பகுதியில் அதாவது நமது ஆசனவாய்க்கு சற்று மேல்பகுதியில் இருக்கிறது.  இதனை தான் யோக முறையில் குண்டலினி சக்தி என்று அழைக்கிறோம்.

இந்த உயிரின் ஒரு பகுதிதான் இல்லையில்லை உயிரின் சிறு பகுதியானது நமக்கு மனமாக செயல்படுகிறது.

ஆத்மா என்பது தான் உயிரின் மற்றொரு பெயர்.

ஜோதிடத்தில் ஆத்மாவை குறிக்கும் இடம் எது தெரியுமா?

நீங்கள் பிறந்துள்ள லக்னம் தான்.  ஆம்.  லக்னம் தான் உயிர்.

ஒவ்வொரு லக்னத்தில் பிறந்துள்ளவர்களுக்கும் ஒரு கிரகம் லக்னாதிபதியாக வரும்.  ஆனால் பொதுவாக ஜோதிடத்தில் ஆத்ம காரகன் என்று ஒருவர் இருக்கிறார்.  யார்.

விடை உங்களுக்கு தெரிந்தது தான்.  சூரியன்.

சூரியன் ஆத்மாவிற்கு காரகன்.  நம் உயிர் சக்திக்கு காரணமாக இருப்பவர்.  நமக்கு மட்டும் இல்லை.  இந்த உலகில் உள்ள கோடானு கோடி உயிர்களுக்கெல்லாம் மூலமாக இருப்பவர் சூரியனே.  அவரின்றி உயிர்களில்லை.

சரி வெறும் உயிர் இருந்தால் மட்டும் போதுமா.  ஆவியாக அலையவேண்டியது தான்.

என்னிடம் பலதரப்பட்ட அருமையான சாப்ட்வேர்கள் உள்ளன. அட விலைக்கு வாங்காமலே இணையத்தில் டவுன்லோட் செய்துவிடுவேன்.  மிகவும் பெரிய சாப்ட்வேர்கள் எல்லாம் இருக்கின்றன.  அவற்றை நீங்கள் இன்ஸ்டால் கூட செய்யத்தேவையில்லை.  அப்படியே ஓப்பன் செய்து உபயோகிக்கலாம்.  போர்ட்டபிள் சாப்ட்வேர்களாக மாற்றி வைத்துள்ளேன்.

ஆனால் ஒரே ஒரு சிறிய பிரச்சனை.  என்னிடம் கணிணி இல்லை.

அட இது சின்ன பிரச்சனையா.  இதுதாம்ப்பா முக்கியம்.

கணிணி இருந்தால் தானே இந்த சாப்ட்வேர்களை உபயோகிக்க முடியும்.

இல்லாட்டி சும்மா சிடியில் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

கணிணிக்கு நான் எங்க போவேன்.  பணம் இல்லையே.

சும்மா!!

இந்த சாப்ட்வேர்கள் மாதிரிதான் உயிரும்.  வெறும் உயிர் இருந்தால் பாட்டு கேக்காது நைனா.

உடம்பு வேணும்.  இந்த உடலை குறிப்பவர் யாரு.

வேற யாரு நம்ம ஆளுதான்

அட புரியலைப்பா ஒழுங்காக சொல்லு

இன்னுமா புரியலை.  அட சந்திரன் தான்

ஜோதிடத்தில் சந்திரன் தான் நமது உடலைக்குறிப்பவர்.

அவருக்குகென்று தனியாக சக்தியில்லை.  அவர் சூரியனிடமிருந்தே ஒளியைப்பெற்று நமக்கு தருகிறார்.

வெறும் உடலை மட்டும் பெற்றிருந்தால் அதுக்கு பெயர் பிணம்.

உயிரும் உடலும் இணைந்த பின்பு தான் மனிதன், இன்னபிற ஜீவராசிகளெல்லாம்.

உயிரிலிருந்து ஆற்றலை பெற்றுதானே மனமாகியது.

இப்போது சொல்லுங்கள் நமது மனதைக் குறிப்பவர் யார்?

நம் மனதை குறிப்பவரும் சந்திரனே.


இந்திரனும், சந்திரனும் இணைந்து கிடைப்பது எந்திரன்.

அட மனுசனைத்தான் அப்படி சொன்னேன்.

மனுசனும் எந்திரன் தான்,  அவனை ஆட்டுவிப்பவன் இறைவன். அவன் தாளத்திற்கு ஏற்ப ஆடுபவன் மனிதன்.

இப்ப சமாச்சாரத்திற்கு போகலாமா?

இந்தப்படி உயிரின் சிறு பகுதியாகிய மனமே மனிதனை இந்த ஆட்டம் போட வைக்கிறது.  அதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலே மார்க்கம் உண்டு என்றால்.  உயிரின் சக்தியை முழுமையாக செயல்படுத்த முடிந்தால்.  இறைவனே நம் வசம்

ஆனால் அது சாதாரண காரியம் இல்லையே.

நீங்கள் ஆலயத்திற்கு செல்லும்போது பார்த்தீர்களானால் வழியில் சிறு சிறு தெய்வங்கள், சிலைகள் இருக்கும். உள்ளேதான் மூலவர் இருப்பார்.

நீங்கள் பாட்டிற்கும் நேரே உள்ளே சென்று மூலவரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லிவிட்டு வந்தால் ஒன்றும் நடக்காது.

ஏன்?

வழியில் அவர்கள் ஏன் உட்கார்ந்திருக்கிறார்கள். உங்களை வேடிக்கை பார்ப்பதற்கா.

அவங்களை கவனிக்கனும் அப்பு?

என்னாது கவனிக்கனுமா? அப்படின்னா!

ஆமா! ஒரு 100 ரூபாய் நோட்ட நீட்டு. வந்த வேலை முடிஞ்சுடும்.

அட போடா முட்டாளே.  கவனிக்கனும்னா அந்த கவனிப்பு இல்லைடா

அப்புறம்.


கவனிக்கறதுன்னா.  மொதல்ல அவங்களை வழிபடனும் அவிங்க கிட்ட நம்ம பிரச்சனைகளை சொல்லி அப்பாயின்மென்ட் வாங்கனும்.  அப்புறமா உள்ளே போயி மேலதிகாரியை பார்க்கனும்.  அப்பதான் நாம் வந்த வேலை ஈசியா முடியும்.

 நீ பாட்டுக்கும் நேரே உள்ள போனேன்னு வையி.  வெளியில் இருக்கறவுங்க இவன் ரொம்ப திமிர் புடிச்ச ஆளு, யாரையும் மதிக்க மாட்றான்.  இவனை ரிஜக்ட் பண்ணிடுங்கன்னு தலைவருக்கு SMS அனுப்பிடுவாங்க.

நாம வாசலை தாண்டறதுக்குள்ள செய்தி போயிடும்.

அப்புறம் நீங்க காட்டு கத்து கத்தினாலும் வேலைக்காகாது.


இப்ப புரியுதா.

அது போல  உயிரினை நாம் அணுக வேண்டுமென்றால் அதற்கு முன்பு அதன் சேவகனான மனதை கவனிக்கனும்..அப்பதான் அந்த ஆள் நம்மை சரியான நேரத்தில் மேலதிகாரியிடம் அழைத்துச்சென்று நமது வேலைகளை எளிதாக முடித்து கொடுப்பார்.

எனவே மனதின் வழியே தான் உயிரை அடையலாம்.

மனதை அடக்க, வழிக்கு கொண்டுவர முடிந்தால் மற்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப ஈசி.  வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுடும்.

ஆனா பாருங்க.  அந்த மனம் இருக்கிறதே.  அது இலேசுப்பட்ட ஆளில்லை.  அவரை நம்ம வழிக்கு கொண்டு வரணும்னா.  ஐயோ அது பெரிய கதை

என்ன கதை ரொம்ப பெரிசாயிடுச்சா.  அடுத்த பகுதியில் பார்ப்போமா!!

8 comments:

 1. அண்ணே ஓஷோ சொன்னத நான் சொல்லுறேன்...

  அதாவது உடலின் சூச்சம வடிவம் மனம்
  மனதின் ஸ்துல வடிவம் உடம்பு

  இந்த படம் ஒட்டுவாங்களே தியேட்டர்ல...அங்கே பார்தீங்கனா நம்ம நமீதா கூட ஆப்ரேடர் ரூம்ல இருந்து வரும் போதும் வெறும் துகள் துகளா (ஒளியா,மனமா ) இருப்பாங்க.....ஸ்க்ரீன் ல வந்து விழுந்ததும் எல்லோரும் எல்லோரும் (என்னை மாதிரி பலர்) வெச்ச கண்ணு வாங்காம பார்பாங்க.....மனமா இருந்தது உடம்பா தெரியும்....அதனால தான் மனம் போல வாழ்வு ....மனம் எப்பிடியோ அப்படி தான் வாழ்வும்...நம்ம நமிதாவுக்கு ரொம்ப பெரிய மனசு :)

  ReplyDelete
 2. ஓஷோ ரசிகரான நீங்க சொன்னதுக்கப்புறம் மறுக்கமுடியுமா. ஆமோதிக்கிறேன்.

  ஆமாம் ஆமாம் நமீதாவுக்கு பெரிய மனசுதான் ஒத்துக்கிறேன்.

  ReplyDelete
 3. வணக்கம் தோழர் மணி அவர்களே,

  அனுபவஜோதிடத்தில் - தில்லுதுரை பகுதி பார்த்தேன்..

  //22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?
  சங்கர் குருசாமி சொன்ன அனைத்தும்.//

  ஆகா.. மகிழ்ச்சி தோழரே..
  அப்போ எங்க சிவயசிவ – வலைத்தளமும் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கீக..

  நன்றி.. நன்றி .. நன்றி..

  அப்புறம் இன்னிக்குத்தான் உங்களோட முத்துச் சிதறல்கள் பார்த்தேன்..
  இத்தனை நாள் இப்படி ஒரு அருமையான தளத்தை பார்வையிடாமல் இருந்ததுக்கு மன்னிக்க வேண்டும்..

  இனி தொடர்ந்து வருவோம்லே…

  http://sivaayasivaa.blogspot.com

  ReplyDelete
 4. அப்புறம் எங்கே பாலோயர்ஸ் விட்ஜெட் ஏ காணோமே ?
  இணைச்சிட்டா வசதியா இருக்குமே தோழரே ?

  நன்றி..

  ReplyDelete
 5. வாங்க திரு. சிவ.சி.மா. ஜானகிராமன் ஐயா அவர்களே, உங்கள் வருகை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உங்களைப்பற்றியும், உங்கள் ஆக்கங்களையும் வகுப்பறையில் படித்திருக்கிறேன். உங்கள் வலைதளமும் எனக்கு மிகவும் பிடிக்கும். தேவாரம் முழுமையும் தெரிந்த உங்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு.

  //எங்கே பாலோயர்ஸ் விட்ஜெட் ஏ காணோமே ?//
  நண்பர்கள் என்று பாலோயர்ஸ் விட்ஜெட் இணைத்திருந்தேனே. எப்படி திடீர் என்று காணாமல் போனது என்று தெரியவில்லை முயன்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. நன்றி மணி ...

  உங்கள் நண்பர்களில் ஒருவனானேன்..

  வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்....

  ReplyDelete
 7. வணக்கம் தோழரே,

  முருகேசன் சாருக்கு COMMENTS VIA EMAIL SUBSCRIPTION செட்டிங்க்ஸ் அனுப்பியிருக்கிறதுக்கு நன்றி..

  ஆனா.. தலை இன்னும் அதை ஆக்டிவேட் பண்ணலை..அங்கேயேயும் கடிச்சிட்டு வந்திருக்கேன்.

  நன்றி.

  ReplyDelete
 8. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி தோழரே. நான் அனுப்பிய screen shot மற்றும் செட்டிங்க்ஸ் அவரது வலைதளத்தில் காணப்படவில்லை என்று screen shots பதில் அனுப்பியிருந்தார். மேலும் திரு. சரண் அவர்களுக்கு எழுதியிருப்பதாகவும் பதில் அளித்துள்ளார். அதுவரை பொருத்திருப்போம்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.