வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

27 April 2011

நினைவில் கொள்ள வேண்டிய ஜோதிட விதிகள் - பாகம் 2

ஜோதிடத்தில் கிரகங்கள் தாங்கள் பெற்ற ஆதிபத்யம் மற்றும் தான் அமர்ந்துள்ள வீட்டில் இருக்கும் பலம் (அ) பலவீனத்திற்கேற்றவாறு பலன்களை அளிக்கின்றனர்.  

ஆதிபத்யம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கேற்றவாறு மாறுபடும்.  கிரகங்களின் பலம் என்பது தாங்கள் அமர்ந்துள்ள வீடு உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன.

கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.

அதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.

1.  கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.

2.  ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும்.  இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.

3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.

சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசி

நீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசி

ஆட்சி பெறுவது சிம்ம ராசி

மூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி

எனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும்  சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார்.  பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது.  எனவே ஒரு நட்பும், பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.

எனவே சூரியன் மிதுன, கன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.

செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம்.  அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும்.  ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.

இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.
மூலத்திரிகோண ராசிகள்

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்.

இதில் சூரியன், மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.

சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.

மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.

மூலத்திரிகோண நிலை என்பது உச்சம் மற்றும் ஆட்சி நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்.  இங்கு முக்கால் பங்கு வலிமையுடன் செயல்படும்.

ராகு, கேதுக்களுக்கு பல அபிப்ராய பேதங்கள் இருப்பதால் மூலத்திரிகோண வீடுகளை குறிப்பிடப்படவில்லை.  ஆனால் ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் உச்சமடைகிறார்கள் மற்றும் ராகு விருச்சிகத்தில், கேது ரிஷபத்தில் நீசம் பெறுகின்றனர் என்பதை ஏறக்குறைய பல ஜோதிடர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  அனுபவத்திலும் சரியாகவே வருகிறது.

அது போலவே கடகம், மகரம் ஆகிய ராசிகளில் ராகு, கேதுக்கள் இருக்கும் போது விஷேஷமான பலன்களை தருகின்றனர்.  கடகத்தில் மூன்று வேதங்களும், மகரத்தில் 1 வேதமும் இருப்பதாகவும் அங்கு பாம்புகள் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல சாஸ்திர ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது உலக வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது விதி.

கிரகங்கள் ராசியிலும் அம்சத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம்.  ராசியில் வலிமை பெற்று அம்சத்தில் வலிமை குறைந்தால் பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.  ராசியில் வலிமை குறைந்து அம்சத்தில் வலிமை பெற்றால் பாதியளவு பலன்களாவது கிடைக்கும்.

எனவே ராசி, அம்சம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தீய ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை குறைந்தும், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்றும் இருக்க வேண்டும்.

பகை கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்றாலும் தனது ஆதிபத்ய பலன்களை சரிவர கிரகங்கள் அளிப்பதில்லை.

ராசிகளின் திக்குகளை நினைவில் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.  கீழே பாருங்கள்.  மீன ராசியிலிருந்து வடகிழக்கு, தென்மேற்கு என நினைவில் கொள்ளுங்கள் பின்பு மீண்டும் அதே வரிசையில் போடுங்கள்  தவறுகள் வராது.
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
மேற்கு

இராசி
வடக்கு
தெற்கு
கிழக்கு
கிழக்கு
வடக்கு
மேற்கு
தெற்கு

 அடுத்ததாக, தசா புக்தியில் வரும் புத்திகாலங்களை கணக்கிட ஒரு வழிமுறை உள்ளது. கீழே கொடுத்துள்ளேன்.

உ.தா.

சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி கணக்கிட,

சனி திசை 19 வருடம்
செவ்வாய் திசை 7 வருடம்

இரண்டையும் பெருக்க

19 x 7 = 133

இந்த 133 கடைசி எண்ணாக வரும் 3 மட்டும் தனியாக பிரித்து 3 ஆல் பெருக்க நாட்கள் கிடைக்கும்.  முதல் இரண்டு எண்கள் மாதங்கள் (உ.தா. 13 மாதங்கள்)

133 = 13 மாதங்கள் மற்றும்  3 x 3 = 9 நாட்கள்

எனவே சனிதிசையில் செவ்வாய் புக்திகாலம் 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் வரும்.  புரிகிறதா.

 எனது அனுபவத்தில் திருக்கணித முறை சரியான பலன்களை கூற ஒத்து வருகிறது.  கணிணி மூலம் கணிப்பதானால் கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்தை பயன்படுத்தும் போது ஏறக்குறைய திருக்கணிதத்தின் கிரகநிலைகள் மற்றும் திசா புத்தி இருப்பு காலங்கள் ஒத்துப்போகிறது.

நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். உங்களது கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.

நான் விம்சோத்ரி தசா கணக்கிடுவதற்கு பிறந்த ஆங்கிலத் தேதியுடன் அப்படியே தசா புக்தி வருடங்களை கூட்டிப் பயன்படுத்துவதில்லை.  வருடத்திற்கு 360 நாட்கள் என்ற நிலையிலேயே விம்சோத்திரி தசா வருடங்கள் தரப்பட்டிருக்கின்றன.  எனவே  வருடத்திற்கு 5 ¼ நாட்களை கழித்தே கணக்கிட்டு வருகிறேன்.  அனுபவத்திலும் அது சரியாகவே வருகிறது. 

ஜகன்நாத ஹோராவில் சாவன வருடம் (360 நாட்கள்) என்ற வசதியை அளித்துள்ளார்கள் மற்ற மென்பொருள்களிலும் 360 நாட்கள் கணக்கிடும் வசதி உள்ளது.  எனவே அதனை பயன்படுத்தும் போது மிகச் சரியான தசா புக்தி காலங்கள் நடைபெறுவதை கணக்கிடலாம்.

என்னைப் பொருத்த வரையில் எனது அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் சரியென கருதும் விஷயங்களை தயங்காமல் பயன்படுத்துகிறேன்.  தோராயமான கணக்கீடு என்பது தோராயமான பலன்களையே தரும்.  முடிந்தவரை சரியான கணக்கீடு செய்தால் தவறுகள் குறையும் என்பது எனது அபிப்ராயம்.

இவற்றையெல்லாம் நான் தெரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன்.  நான் அறிந்தவற்றை எளிதாக்கி பிறருக்கு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  எனவே தான் பொதுவில் வைக்கிறேன்.  விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்த்தில் கேளுங்கள்.  தொடர்ந்து எனது அனுபவத்தினையும் எளிய வழிமுறைகளையும் எழுதவிருக்கிறேன் அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்.

5 comments:

 1. my date of birth 12/07/1982 time 00.50 am place karur.

  இப்போது எனக்கு நடக்கும் தசா புத்தி என்னவென்று சொலுங்கள் ?

  ReplyDelete
 2. தங்களுக்கு தற்போது

  புதன் திசை 19.07.2008 முதல் 21.04.2025 வரை நடைபெறுகிறது.

  புதன் தசையில் கேது புக்தி 03.12.2010 முதல் 25.11.2011 வரை நடைபெறும்

  இதன் பின்பு புதன் தசையில் சுக்கிரன் புக்தி நடைபெறும்.

  இது வருடத்திற்கு 360 நாட்கள் முறையில் கணக்கிடப்பட்ட தசா புக்தி முறை.

  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. Dear Sir

  my date of birth 20th August 1976 - Dasa iruppu kodukkavum.

  Sani dasai enakku eppadi irukkum.

  Thanks
  Arul

  ReplyDelete
 4. NEENGA SOLRA THIRUKANITHA MURAI THAPPAVE ELLATHAIYUM KATUTHU DASABUKTHI, RASI BAVA GRAGANGAL PALANGAL ELLAME THAVARAGA SOLGIRATHU ITHAI EN JATHAKATHAI VAITHU REFER SAIDU PURINTHU KONDEN MATRUM EN MAGAL MAGAN JADAKATAI VAITHUM ALASIYATHIL VAKIYA PANJANGAM JADAKAM SARIYAGA PALANGAL VARUGIRATHU NEENGAL THIRUKANITHATHAIYUM VAKIYATHAIYUM VAITHU JADAKAM POTTU PARTHU PALANGALAI ALASUNGAL APPOTHU EN SOLLIL UNMAI IRUPATHAI PURINTHU KOLVEERGAL THIRUKKANITHAM THAVARU THAVARU THAVARU ANUBAVAM VAINTHA JOTHIDARGALAI PALPERIDAM KETTATHIL VAKIYAME SIRANTHATHU ENDRE KOORINARGAL ITHAI NAN UNMAIYAGA KOORUKIREN MY E.Mail id ravichandran_vr@yahoo.co.in residing in chennai

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா, ஜோதிட உலகில் இன்றளவும்தீராத மிகப்பெரிய பிரச்சினை எது சரியானது வாக்கியமா? திருக்கணிதமா? என்பது தான். மிகப்பெரிய ஜோதிட மேதைகள் எல்லாம் இதில் வேறுபடுகிறார்கள். பல பிரபலமான ஜோதிட மேதைகள் திருக்கணிதமே சரியானது என்ற முடிவிற்கும் வந்துள்ளார்கள். கிராமத்தில் உள்ள பாரம்பரிய ஜோதிடர்களே வாக்கியம் சரியானது என்று கூறி பயன்படுத்தி வருகிறார்கள். அனுபவத்தில் எது சரியானது என்றால் திருக்கணிதமே சரியானது என்கிறேன் நான். வாருங்கள் சரிபார்ப்போம்.

   Delete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.