வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

05 May 2011

கிரகங்கள் நம்மை ஆளுமை செய்வதில்லை!!


கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை!  நம்மை தூண்டுகின்றன அவ்வளவே!!

நன்றி: திரு. சுகுமார்ஜீ!
 http://www.sugumarje.com/

எனது வலையுலக நண்பர்  திரு. சித்தூர் முருகேசன் அவர்களின் http://anubavajothidam.com/ வலைப்பதிவில் திரு. சுகுமார்ஜீ அவர்கள் எழுதிய வரிகள் இவை.  எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவற்றை இங்கு எழுதியிருக்கின்றேன்..

இந்த வரிகளில் உள்ள யதார்த்தம் என்னை மிகவும் கவர்ந்தது.  கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை செயல்களை செய்ய நம்மை தூண்டுகின்றன.  இது எவ்வளவு பெரிய உண்மை.  முதலில் ஆளுமை என்பது என்ன? என்று பார்ப்போம்.

கிரகங்களின் ஆளுமை என்பது எந்த நிலையிலும் நாம் அவற்றின் கட்டுப்பாட்டை மீற முடியாத நிலையை குறிக்கிறது.  ஆனால் நிஜத்தில் மனிதர்கள் யார் லேசுப்பட்டவர்களா.  ஆறறிவு பெற்றவர்களாயிற்றே அவர்கள் அந்த நவக்கிரகங்களுக்கே அல்வா கொடுப்பவர்களாயிற்றே!  உண்மையில் பலர் கொடுத்தும் இருக்கிறார்கள்.  இன்னுமும் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

கிரகங்களின் பிடியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும், மிகச் சுலபமான வழிதான் திருவள்ளுவர் இரண்டு வரிகளில் சொல்லியுள்ளார்.

”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

வேண்டுதல் வேண்டாமை இல்லாத அந்த இறைவனின் அடியைப் பற்றியவர்களுக்கு யாராலும் எப்போதும் துன்பம் இல்லை என்கிறார் வள்ளுவர்.  அவரைவிட மிக எளிமையாக நமக்குச் சொல்பவர் யார்.

பலரும் இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றனர்.  பலர் பின்பற்றி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.  நமது முன்னோர்களான ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள் எல்லாம் கிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்தது இந்த வழியை பின்பற்றிதான்.

கிரகங்கள் நம்மை ஆளுமை செய்வதில்லை, தூண்டுகின்றன.  இந்தவரிகள் உண்மையில் பிரபஞ்ச ரகசியம் கூட. கிரகங்கள் நம்மை செயல்களை செய்ய தூண்டுகின்றன. நம் செயல்களின் மூலம் நாம் நமக்கான வாழ்க்கையைப் பெறுகிறோம். கிரகங்களின் நிலையை அறிந்தவன் ஜோதிடன் அவற்றின் நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை தமக்கும், பிறருக்கும் அமைத்துக் கொள்ள வழிகாட்டியாக இருப்பவனே ஜோதிடன்.

பல கோடி மைல்கள் தொலைவில் உள்ள கிரகங்களாவது நம்மை ஆளுமை செய்வதாவது, தூண்டுவதாவது இதெல்லாம் நடக்கிற கதையா சுத்த ரீல், கப்சா என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.  பாவம் அவர்களுக்கு நல்ல காலம், நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.  

மனிதனுக்கு துன்பங்கள் இல்லாத வாழ்க்கை அமைந்துவிட்டால் அவன் இறைவனை என்றும் கருதிப்பாரான் என்ற உண்மையை அறிந்த இறைவன் அவனது செயல்களாலே அவனுக்கு அவனே ஆப்பு அடித்துக்கொள்ள செய்த வழிமுறையே விதியமைப்பு, கர்மா இன்ன பிற இத்யாதியெல்லாம்.

நல்ல நிலையில் வாழும் வரை மனிதன் எதையும் நம்புவதுமில்லை, யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்பதும் இல்லை.  திமிர், திமிர் தான் அதற்கு காரணம்.  எல்லாம் தன் அறிவால் அறிந்தது, உழைப்பால் கிடைத்தது என்ற ஆணவம் அவனை அப்படி பேச வைக்கிறது,

மனித உடல் ஒன்றும் அந்த வானில் வந்து குதித்தது அல்ல, அவை பஞ்ச பூதங்களின் கலவையே.  பஞ்ச பூதங்களே இந்த உலகை ஆளுகின்றன.  அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் இவனுடைய உடலில் ஏற்படத்தான் செய்யும்.  அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது.

நாம் பிறக்கும் போது எந்த கிரகங்களின் நிலை எவ்வாறு இருந்தது.  அவற்றின் பலம், பலவீனம் என்ன இவற்றையெல்லாம் காட்டும் ஒரு குறிப்புதான் ஜாதகம் என்பது.  ஆதிகாலத்தில் நாள்காட்டிகள் இல்லாத காலகட்டத்தில் மனிதனின் பிறப்பு குறியீடாக இருந்ததே ஜாதகம்.

அந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்றவாறுதான் மனிதனின் உடல் அமைப்பும் இருக்கும்.  அந்த கிரகங்களின் காலகட்டம் நடைபெறும் போது அதாவது தசாபுக்தி காலம் நடைபெறும் போது அப்போது வானில் இருக்கும் கோள்களின் நிலைக்கு (கோள்+சாரம்) ஏற்ப மனிதனில் உடலில், உள்ளத்தில் ஏற்படும் பாதிப்புகளே பலன்கள்.

மிகவும் சிரமப்பட வேண்டாம்.  அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை இயற்கையாகவே நம்மால் உணர முடியும்.  அந்த நாட்களில் நமது உடலில் இரத்த ஓட்டம் சராசரியை விட சற்று அதிகமாகவே காணப்படும்.  இது இன்றைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூட ஒப்புக்கொண்ட உண்மை.

விஞ்ஞானம் எதையும்  பரிசோதனை செய்து பின்னர் தான் ஒப்புக்கொள்ளும்.  நாம் இதுவரை விஞ்ஞானத்தில் முன்னேறியுள்ளதெல்லாம் நமது முன்னோர்களின் அறிவோடு ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை.  நமது விஞ்ஞானம் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு மிகவும் அதிகம் உள்ளது.

எங்கோ தூரத்தில் இருக்கும் சந்திரன் நமக்குள் ஏன் இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படுத்த வேண்டும்.

சமீபத்தில் எனக்கு ஒரு உடல் உபாதை ஏற்பட்டது.  அதாவது எனக்கு ஒரு முறை கொளவி ஒன்று கொட்டி விட்டது.  தாங்க முடியாத கடுமையான வலி.  நானும் மருத்துவமனைக்கு சென்று ஊசி, மாத்திரையெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டேன்.  அப்புறம் சில மாதங்களுக்கு எந்த தொந்திரவும் இல்லை.  

கடந்த திங்களன்று அமாவாசை இரவு நான் உறங்கச் சென்றபோது உடலில் கடுமையான நமைச்சல் ஏற்பட்டது.  உடலெங்கும் அரிப்பு ஏற்பட்டு அன்று இரவு சரியாக தூங்க முடியாமல் பாடாத பாடுபட்டேன்.  பொழுது விடிந்ததும்  மருத்துவரிடம் சென்று ஊசி, மாத்திரையெல்லாம் எடுத்துக்கொண்ட பின்பு தற்போது குணமடைந்து விட்டது.

பொதுவாக தேள், பூரான் மற்றும் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை, பௌர்ணமி காலங்களில் இந்த மாதிரியான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஏன் அவர்களுக்கு மற்ற காலங்களில் அவர்களுக்கு இந்த உபாதைகள் ஏற்படுவதில்லை.   வயதானவர்கள் பலர் உடல்நலம் குன்றி படுத்தப்படுக்கையாக இருந்த நிலையில் அமாவாசை, பௌர்ணமி காலங்களில் மரணிப்பதை நாம் சாதாரணமாக காணலாம்.  இவையெல்லாம் அனுபவ ரீதியான நம் கண்முன்னே நடைபெறும் விஷயங்கள்.  கிரகங்கள் நம்மை பாதிக்கின்றன என்பதற்கு இந்த ஒரு சிறிய உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்.

ஆகா! எதற்கெடுத்தாலும் சந்திரன், அமாவாசை என்று கதையளக்கிறார்களே, மற்ற கிரகங்கள் எல்லாவற்றிற்கும் என்ன பதில் என்று கேட்பவர்களுக்கு சொல்கிறேன்.  அனைத்து கிரகங்களும் இதே வகையில் தான் நம்மை பாதிக்கின்றன.  அவற்றின் தாக்கத்தை உணரும் வகையில் நமக்கு உணர்வுகள் இல்லை.  ஆனால் பாதிப்புகள் என்பது நிச்சயம் உண்டு.

ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவித்து உணர்ந்தால் தான் உண்மை என்று ஏற்றுக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை என்ன செய்வது. அது அவர்களின் அறியாமை.  நெருப்பு சுடும் என்று சுட்டபின்புதான் தெரியும்.  எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் ஓரளவேனும் அவற்றின் பாதிப்பில் இருந்து விடுபடலாம். 

எதற்காக நான் இவற்றையெல்லாம் இங்கு எழுதுகின்றேன் என்றால் மனிதர்கள் வாழ்வில் ஓரளவேனும் அறிவில் தெளிவு பெற்று துன்பங்களை குறைத்துக் கொண்டு இன்பமாக வாழ வேண்டும்.  அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்.  நம் முன்னோர்கள் நாம் வாழ ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றின் உண்மைகளை உணர்ந்து அதன் படி வாழ முற்பட வேண்டும்.  குறைந்தபட்சம் அவற்றை அறிந்து கொள்வாவது முற்பட வேண்டும்.

இந்த மனித பிறவியானது ஏன் பிறந்தோம் என்ன செய்ய வேண்டும், எங்கே பயணிக்க வேண்டும் என்ற திக்குத் தெரியாமல் பலரும் ஏதோ பிறந்தோம் ஏதோ ஒரு பேருந்தில் பயணித்தோம் எங்கோ போகிறோம் என்ற வகையில் வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் ஜோதிடன் ஒருவனே விதியமைப்பினை தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை தனது அறிவால் உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு தனது வாழ்க்கையமைப்பினை அமைத்துக் கொண்டு பிறருக்கும் வாழ வழிகாட்டி உதவுகிறான். சரியாக சொன்னால் எந்த பேருந்தில் எங்கு ஏறினால் எங்கு செல்லலாம் என்று சொல்லத் தெரிந்து அதில் சரியாகப் பயணிப்பவனும் ஜோதிடனே ஆவான்.

எனவே இறுதியாக சொல்கின்றேன் ஜோதிடமும் அறிவியலே.  அது மனிதனின் அறிவு சார்ந்த இயலே.  தெளிவான அறிவுடன் அதனை நாம் அனுகினால் அவற்றால் பல நன்மைகளை மனிதன் பெறலாம்.  போலிகள் எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் உண்டு.  உண்மையை அறிந்துகொண்டு நாம் பின்பற்றினால் அவற்றால் நமக்கு எக்காலமும் நன்மையுண்டு.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன். வணக்கம்!

6 comments:

  1. கலக்குங்க அண்ணே :)

    ReplyDelete
  2. வாங்க ராஜா! சும்மா டைம் பாசுக்கு எழுதினது. கண்டுக்காதிங்க. உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. அண்ணே ..அப்படியே நம்ம ஜாதக பலன இந்த மெயிலுக்கு அனுப்புங்க gopalakrishnan.ep@gmail.com

    ReplyDelete
  4. வாங்க தனிக்காட்டு ராஜா! அவர்களே உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்.

    உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

    ReplyDelete
  5. என் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டதற்கு மனமார்ந்த நன்றி... அன்பன் சுகுமார்ஜி
    நல்ல உழைப்பு... தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  6. //என் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.//

    வாங்க சுகுமார்ஜி. நம்ம கடைக்கு வந்தமைக்கு மிக்க நன்றி. உண்மையில் உங்களது கருத்துகளை நான் எடுத்தாண்டமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பதிவில் சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.