வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

10 November 2010

ஜோதிடம் பற்றிய சில கருத்துகள் - பாகம் 3

அனைவருக்கும் வணக்கம்.

       சென்ற பதிவில் நடைமுறை வாழ்வில் நடைமுறை வாழ்வில் நாம் எப்படி வாழ்ந்து கர்ம வினைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம் என்று எழுதியிருந்தேன்.  என்னிடம் பலரும் ஜோதிட ஆலோசனைகள் கேட்டு எழுதியிருந்தனர்.  என்னால் இயன்ற அளவிற்கு உடனுக்குடன் பதில் எழுதியிருந்தேன்.  நம் தளத்திற்கு வருபவர்கள் ஜோதிட கட்டுரைகளை படிப்பதோடல்லாமல் தங்களது கருத்துரைகளையும் சில விளக்கங்களை கேட்டும் எழுதலாம்.  என்னால் இயன்ற வரை அவற்றை நம் தளத்தில் விளக்கி எழுத முயலுவேன்.

       ஜோதிட சாஸ்திரமானது கடவுள் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டது.  இந்து தர்ம சாஸ்திரத்தில் உள்ள கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது.  இந்து மத நம்பிக்கைகள் இல்லாமல் ஜோதிடம் மட்டும் வேண்டும் என்பது பூவிலிருந்து மணத்தை மட்டும் தனியாக பிரித்து நுகர வேண்டும் என்பதை போன்றது. 

       நான் பூர்வஜென்ம பாவ புண்ணிங்களை பற்றியெல்லாம் குறிப்பிட்டு எழுதுவதால் அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் இந்த நவீன நாகரீக உலகில் அதற்கெல்லாம் இடமில்லை எனக் கருத வேண்டாம்.  நமது இந்து மத நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாம் இன்று கேலியும் கிண்டலும் செய்யபடலாம்.  ஆனால் அவற்றில் ஒவ்வொன்றிலும் ஆழமான பொருள் இருக்கும்  அவை மனித வாழ்க்கையோடு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருக்கும்.  பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஆன்மோவோடு தொடர்புடைய ஒரே மதம் நமது இந்து மதம் மட்டுமே.

        ஆன்மீகமானது மனித நிலையிலிருந்து நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தவே ஏற்படுத்தப்பட்டது.  ஆனால் இன்றைக்கு ஆன்மீகத்துறையில் உள்ள போலிகளால் அதன் உண்மையான நோக்கம் களங்கமடைந்து விட்டது.  ஆயினும் இது தற்காலிகமானதே ஏனெனில் உண்மையான ஆன்மீகம் உயர்வானது, அது அழிக்க முடியாதது அழிவில்லாதது. 
        அனைத்து மதங்களுமே மனிதருக்குள் அன்பையே போதிக்கின்றன.  பிறருக்கு உபகாரம் செய்து வாழ்வதின் அவசியத்தை போதிக்கின்றன.  எந்த மதமும் மனிதரை கொலை செய்ய சொல்லவில்லை கற்பழிக்க சொல்லவில்லை கொளையடிக்க போதிக்கவில்லை.  பிற மதங்களை  மனிதர்களை அழிக்க சொல்லவில்லை மனிதன் தனது ஆதிக்க சக்தியை விரிவுபடுத்த வேண்டி மதத்தின் பெயரால் பல பாவ செயல்களை செய்து தனக்கும் தனது மதத்திற்கும் நீங்காத பழியை தேடிக்கொள்கிறான்.  இது தவிர்க்கப்பட வேண்டும்.

        சரி ஜோதிடம் சம்பந்தமாக எழுத வந்தவன் இடையில் வேறு விஷயங்களை எழுதுகிறேன் என நினைக்க வேண்டாம்.  என் மனதில் எழுந்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த தளம். எனவே எனக்கு சரியென பட்ட கருத்துகளை எழுதுகிறேன். பொறுத்தருள்க.

         பொதுவாக அனைத்து துறைகளிலுமே போலிகள் உண்டு. ஜோதிடமும் அதற்கு விதிவிலக்கல்ல ஏனெனில் ஜோதிடம் கற்க வந்தவர்கள் அதனை தெரிந்து கொள்ள முழுமையாக முயற்சி செய்வதில்லை இடையில் பாதி தெரிந்து கொண்டு சரியோ தவறோ என யோசிக்காமல் தனக்கு தோன்றியதையெல்லாம் பரிகாரம் படையல் எனக்கூறி தம்மிடம் வருபவர்களிடம் பணத்தை கறப்பதிலேயே குறியாக உள்ளனர்.  அது அவர்களது குற்றம்தான் என்றாலும் மக்களின் அறியாமையும் ஒரு காரணம். 

         போலியானது எப்படி தோன்றுகிறது என பார்ப்போமானால் உண்மையான பொருளை செய்ய முயற்சிசெய்து அது முடியாமல் போகும்போது அதே மாதிரி போலியாக செய்தாவது திருப்திபட்டுக்கொள்வது போன்ற மனநிலை.  அதாவது டாக்டராக முடியாமல் மருத்துவமனை ஊழியரெல்லாம் வைத்தியம் பார்ப்பது போன்ற நிலை.  இது ஆபத்தில் தான் முடியுமே ஒழிய நன்மைகள் மிக குறைவே.

         எனவே சில பேர் தவறாக பலன்களை சொல்லி அதனால் நமக்கு ஏதாகிலும் பாதகமான பலன்கள் ஏற்பட்டிருக்குமாயின் அது நமக்கு பலன் சொன்ன ஜோதிடரின் ஜோதிட ஞானத்தில் ஏற்பட்ட குறைவேயன்றி ஜோதிடத்தின் குறையல்ல.  நல்ல கடையில் தங்கத்தை வாங்காமல் போவது நம் குற்றமேயன்றி தங்கத்தின் குற்றமல்ல என உணர வேண்டும்.

        எனவே ஆரம்பநிலையில் உள்ள ஜோதிடர்கள் பொதுவாக நல்ல விஷயங்களையே சொல்லி பழக வேண்டும்.  தேவையில்லாமல் பலன் கேட்க வருபவரை பீதிக்குள்ளாக்க கூடாது.  பணம் பறிக்கும் நோக்குடன் சீட்டு கட்டுவது, தகடு செய்வது போன்ற பரிகாரங்களை சொல்லி ஏமாற்றக் கூடாது.  பொதுவான கருத்துகளை சொல்லி ஆறுதல் அடைய செய்ய வேண்டும். ஆனால் அவர்களது ஜாதகத்தில் உள்ள நுட்பங்களை நன்றாக ஆராய வேண்டும்.  நடப்பவற்றை கவனித்து வர வேண்டும்.  ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பதை போல தான் ஜோதிடமும் பார்க்க பார்க்க தான் அனுபவம் கிட்டும்.

        உண்மையில் ஜோதிட சாஸ்திரத்தின் விஷயங்களுக்கும்  நுட்பங்களுக்கும் அளவே இல்லை ஜோதிட சாஸ்திரம் கடல் போன்றது.  நாமெல்லாம் கரையில் கால் நனைப்பது போன்ற அளவில் தான் தெரிந்து வைத்திருப்போம்.  நமக்கு கிடைத்தது அவ்வளவுதான். ஆனாலும் நமது தேடலை நிறுத்திவிடக்கூடாது.  நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற நினைப்பும் கூடாது. இறுதிவரை நாம் நமது தேடலை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  தேடுங்கள் அது கிடைக்கப்பெறும் என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும்.

         எல்லாம் தெரிந்த ஜோதிடர் என்று சொல்லக்கூடியவர்கள் கூறிய பலன்கள் கூட பலமுறை நடவாமல் போவதுண்டு அல்லது மாறி நடப்பது உண்டு. அது ஏனெனில் நாம் நமது விதியை எந்த அளவில் தெரிந்து கொள்ளலாம் என்றொரு வரைமுறை உண்டு அந்த அளவிற்கே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். நன்றாக பலன் கூறும் ஜோதிடரே கூட நம் விஷயத்தில் சற்று அசந்துவிடக்கூடும். அதற்கு காரணம் யாதெனில் இன்ன நாளில் இன்ன இடத்தில் இந்த ஜோதிடரால் நமக்கு சில விஷயங்கள் வெளியாக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. இது மறுக்க முடியாத உண்மை. இதை மீறவும் முடியாது என்பதுதான் மற்றுமொரு உண்மை.

அடுத்க பதிவில் சந்திப்போம்.
நன்றி

அன்புடன்
சு. மணிகண்டன்.
நெய்வேலி.

0 கருத்துரைகள்:

Show/Hide Comments

Post a Comment

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.