வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

01 January 2013

மறப்போம் மன்னிப்போம்

அன்பான முத்துச்சிதறல்கள் வாசகர்களுக்கு வணக்கம்,

முதலில் இத்தனை நாட்கள் உங்கள அனைவரையும் பதிவுகள் எதுவும் எழுதாமல் காத்திருக்க வைத்தமைக்கு அனைவரிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது வாழ்வில் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள், மன உளைச்சல் மற்றும் வேலைப்பளு போன்றவற்றால் போதுமான நேரமின்மை காரணமாக நமது தளத்தில் எழுதிவந்த ஜோதிட ஆய்வுத்தொடரை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுவிட்டது.

என் மேல் நம்பிக்கை வைத்து பலர் தொடர்ந்து கருத்துகள் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தொடரை தொடர்ந்து எழுதுமாறு வலியுறுத்தியும் வேண்டுகோள் விடுத்தவண்ணமும் இருந்தனர்.  நான் தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்ன மன ஊசலாட்டத்தில் இருந்ததால் எதற்கும் பதில் எழுதும் மனோநிலையில் அப்போது இல்லை அவர்கள் என் மீதும் எனது எழுத்தின் மீதும் கொண்டிருந்த நல்லதொரு அபிப்ராயத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜோதிடத்தொடர் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்பது தான் உங்கள் மற்றும் எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.  அதிலும் நீங்கள் அனைவரும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் அளவிற்கும் முடிந்தவரை அனைவருக்கும் எளிமையாக புரிகின்ற வரையிலும் எழுதவே முயற்சிக்கிறேன்.  ஜோதிடத்தில் நானறிந்தவற்றை அவற்றை அறிய நான் பட்ட சிரமங்களை, சிக்கலான ஜோதிட கருத்துகளை முடிந்தவரை எளிமையாக வளைதளத்தில் எழுத வேண்டும்.  அதன் மூலம் வருங்காலத்தில் ஜோதிடம் பயில விரும்பும் ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிடத்தில் ஆராய்ச்சிகள் செய்ய விரும்பும் அன்பர்களுக்கும் எனது எழுத்துகள் சிறிதளவாவது உபயோகமாக இருக்கும் என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஜோதிடமானது நமது கர்மவினைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள சில வழிமுறைகள் மூலமாகவும்,பல விதிமுறைகளை கொண்டும் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையென்றே நான் கருதுகிறேன்.

நாம் நமது கர்மவினைகளை அனுபவிப்பதற்கே இந்த உலகில் பிறவியெடுத்துள்ளோம் என்பதே உண்மை.  நாம் இரண்டு விதத்தில் நமது கர்மவினைகளை குறைக்கலாம். 

ஒன்று வாழ்வில் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவித்து கழிப்பது என்பதாகும்.  இந்த வழிமுறை மிகவும் கடினமான ஒன்றாகும்.

மற்றொரு வழிமுறை நம்மை படைத்த இறைவனை, அனைத்தையும் அறிந்த தலைவனை, அந்த அருட்பேராற்றலை, பேரன்பு மிக்க கருணைக்கடலை துதித்து அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி அவன் திருவடிகளை சரணடைந்து நமது அறிவு, திறமை, செல்வம் என்று நாம் இருமாந்திருக்கும் நமது ஆணவம், கர்வம் முதலானவற்றை அவன் திருவடிகளில் சமர்பித்து விழுந்து வணங்கினால் இறைவன் தனது கருணையால் நமது கர்மவினைகளை குறைக்கின்றான்.

கர்மாவினை குறைக்க இந்த இரண்டு வழிமுறைகளை தவிர வேறெந்த வழிமுறைகளும் இல்லை.  முதல் வழிமுறையான அனுபவித்து கழித்தலை தான் இந்த உலகில் பலரும் செய்துவருகின்றோம்.  இன்பம் வரும் போது மகிழ்ந்திருத்தலும், துன்பம் வந்து வருத்துகின்ற போது அழுது புரண்டலையும் நம்மைப் போன்ற சாதாரண பாமரர்கள் அனைவரும் செய்து வருகிறோம்.

ஆனால் ஞானிகள், முனிவர்கள், சித்த புருஷர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனை அறிந்து கொண்டவர்கள் அவன் காலடிகளில் வீழ்ந்துவிடுகின்றனர்.  அவர்களை எந்த கோள்களும், கர்மவினைகளும் எதுவும் செய்ய முடியாது.  எதுவரினும் எம் இறைவன் அவர்களை காப்பான்.  நாளும் கோளும் அவர்களை அணுவளவிற்கும் துன்புறுத்தமாட்டா.

ஆக ஜோதிடம் போன்ற வழிமுறைகள் எல்லாம் நாம் இந்த உலகில் எதற்காக பிறந்தோம், என்னவாக வாழ்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று அறியாத மக்களுக்கே பலன்களை சொல்லும் அதாவது ஜோதிடத்தின் மூலம் ஜோதிடர்கள் அவர்களது கர்மவினைப்பயனை அவர்களது ஜாதகத்தை பார்த்து அறிவிக்கின்றார்கள்.  அது அவர்கள் வாழ்வில் ஏறக்குறைய மிக சரியாக இருக்கும்.

வாழ்வில் இறையருள் பெற்றவர்கள், இறைவனை சரணடைந்தவர்கள், எப்போதும் இறைவனை நீங்காமல் இறைநாமத்தை விடாமல் ஜெபித்து வருபவர்களுக்கு ஜோதிடத்தின் மூலம் நாம் பலன்களை சொல்ல முயன்றால் பெருமளவு சரியாக வருவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.  கர்மவினைகள் குறைந்து வருகின்ற போது, இனியும் மேற்கொண்டு வினைகள் சேராத போது நாம் என்னதான் அவர்களுக்கு பலன்களை சொன்னாலும் சரியாக வராது.  

பரிகாரங்கள் என்று நாம் செய்யும் அனைத்து செயல்களும் இறைவழிபாட்டையே வலியுறுத்துகின்றன. பரிகாரங்களின் தாத்பரியம் இதுதான்.  இதுவரை இறைவனை நினைத்து வழிபடாதவர்கள் கூட தமக்கு துன்பம் என்று வருகின்ற போது ஜோதிடர் சொன்னார் என்று பரிகாரங்களை மனப்பூர்வமாக செய்ய முற்படும் போது அவர்களது முன் ஜென்ம வினைகளின் பயனாக இறையருளை உணர்ந்து கொள்ளக்கூடும்.  அதன் விளைவாக அவர்களது கர்மவினைகள் குறையலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

எனவே இந்த பிறவிகள் அனைத்தும் நமது கர்மாக்களை அனுபவிக்க மட்டுமேயன்றி வேறில்லை.  இவற்றில் ஜோதிடம் மூலம் முடிந்தவரை அவர்களது கர்மாவின் நிலைகளை கண்டறிந்து அவர்களது துன்பத்தை குறைத்து இறையருளை பெற்று இன்பமாக வாழவும், மீண்டும் பாப கர்மாக்களை செய்து துன்பத்தில் உழலாமல் இறைவனை அடையவும் முயலவேண்டும்.

ஜோதிட பலன்கள் 100 சதவிகிதம் துல்லியமாக பலிக்கவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை, அவரவர் கர்மாவின் நிலைகளுக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கையின் நிலைகளை ஓரளவிற்கு மட்டுமே ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.  அறிந்தபின் முழுமூச்சுடன் அவர்கள் இறைவனின் பாதங்களை பற்றினால் அவர்களுக்கு ஜோதிடமும் தேவையில்லை, கர்மாக்களால் துன்பமும் இல்லை.  இது வாழ்க்கையில் நானறிந்த உண்மையும் கூட.  என்னதான் நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் முன்பே கூறியிருந்தாலும் அவற்றை அனுபவித்து உண்மைநிலையை அறிகின்ற போது தான் அவற்றின் மீது நமக்கு முழுநம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படுகின்றது.

தேன் இனிமையான சுவை கொண்டது என்று அறிந்து கொண்டால் மட்டும் நாம் மகிழ்ச்சியடைய முடியாது.  தேனை அனுபவத்தில் சுவைத்து அறியும் போது தான் உண்மையான சுவையும், அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், இன்பத்தையும் நாம் பெற முடியும்.

என்ன அண்ணே! ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்களே ஏதாவது ஜோதிடம் சம்பந்தமா பதிவு போட்ருக்கிங்களான்னு வந்து பாத்தா கர்மா, இறைவன்னு பக்தி பழமா கனிஞ்சிட்ங்க போலருக்கே, இனிமேலாவது தொடர்ந்து எழுதுவீங்களா இல்ல பழையபடி எஸ்கேப்பு தானா?? அப்படீன்னு நீங்க நினைக்கறது புரியுது மக்கா. 

என்னது? மறுபடியும் ஜோதிட பதிவு எழுதறதா ஆளைவிடுங்கப்பா சாமிகளா!  நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கியிருக்குது.  இனிமே அந்த ஜோதிட தொடரெல்லாம் தொடரனும்னா இன்னும் ஒரு வருஷமாச்சும் ஆகும்.  அதாம்பா அடுத்த வருஷத்திலேர்ந்து ஆரம்பிச்சிடுவோம் வர்ட்டா............

13 comments:

 1. wish you happy english new year 2013.

  ReplyDelete
 2. வணக்கம் ஸ்வாமி,

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருஷம் உங்களுக்கு ஷேமமா இருக்க வாழ்த்துக்கள்டா அம்பி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாழ்தெல்லாம் இருக்கட்டும். உங்கள் விருப்பு வெறுப்புகளுக்காக தனிமனித தாக்குதலில் இறங்கி நல்லதொரு ஜோதிட சூழலை வீணாக்கிவிட்டீர்களே நண்பரே. இதனால் நீங்கள் அடைந்த நன்மைதான் என்ன? சிந்தியுங்கள். யாரையும் யாராலும் மாற்ற முடியாது நம்மை நாமே மாற்றிக கொள்வது மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர ஒரே வழி. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இனிமேல் உங்கள் கருத்துகள் இங்கு வெளியிடப்படாது.

   Delete
 3. Sir, மன உளைச்சலுக்கு மருந்து எழுதி அல்லது பேசி தீர்ப்பது...
  எழுதுவதை நிறுத்தாதீங்க ப்ளீஸ் ....

  ReplyDelete
 4. நண்பர் சிம்மத்தோன் அவர்களுக்கு,வணக்கங்கள்.தற்சமயம் சமீபத்தில் தங்களுடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்தோம். ஆனால் ஏதோ ஒரு இடைஞ்சலான சம்பவம் தங்களுடைய மனதை மாற்றியுள்ளது.ந்மது வீட்டிற்கு உள்ளேயே பூஜை அறையும் உள்ளது,கழிவறையும் உள்ளது.அதனால் பூஜை செய்வதை நிறுத்துகிறோமா?. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது.நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வேமே?.
  தங்கள் எழுத்துப் பணி தொடர எமது அன்பான வேண்டுகோள்கள்.

  ReplyDelete
 5. ////வாழ்த்துக்கள்டா அம்பி ///


  அண்ணே ...உங்க மேல தான் இவருக்கு எவ்வளவு அன்பு :)

  நண்பனை விட எதிரிகள் தான் நம்மை அதிகம் கவனிகறாங்க ..........

  நேரம் கிடைக்கும் எழுதுங்க ..... வரிசையாக எழுத நினைத்தால் அதெல்லாம் இன்றைய உலகில் நடக்குமா என்று தெரியவில்லை .........

  உங்கள் அனுபவங்கள் போன்றவற்றை எழுதுங்கள் ........

  முத்து மாலையை நாங்கள் எதிபார்கவில்லை ...சிதறல்கள் போதும்
  போதும்


  ReplyDelete
 6. ////வாழ்த்துக்கள்டா அம்பி ///


  அண்ணே ...உங்க மேல தான் இவருக்கு எவ்வளவு அன்பு :)

  நண்பனை விட எதிரிகள் தான் நம்மை அதிகம் கவனிகறாங்க ..........

  நேரம் கிடைக்கும் எழுதுங்க ..... வரிசையாக எழுத நினைத்தால் அதெல்லாம் இன்றைய உலகில் நடக்குமா என்று தெரியவில்லை .........

  உங்கள் அனுபவங்கள் போன்றவற்றை எழுதுங்கள் ........

  முத்து மாலையை நாங்கள் எதிபார்கவில்லை ...சிதறல்கள் போதும்
  போதும்

  ReplyDelete
 7. மணிகண்டன் சார்,

  வணக்கம். உங்களைப்போல் நல்ல குணம் கொண்ட மனிதரைத்தான் தேடி வந்தேன். நான் ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்து வருகின்றேன். உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் என்னுடைய நண்பர் ஆவீர்களா? என்னை ஏற்றுக்குவீன்களா?

  என்னுடைய அனுபவங்களில் ஒன்று:

  ஒரு நபர் கோவில்பட்டியில் இருந்து வந்தவர் வர்ற வழியில் அவருடைய கத்திரிக்கோல் ஒன்றை சானை பிடித்துக் கொண்டு பஸ் ஏறி எண்ணி வந்த பிறகு தற்செயலாக என் கண்ணில் படுவது போல் காட்டினார். நான் உடனே (உங்களைப் போல்தான்) அந்த நிமிடமே மணியை நோட் பண்ணி பாத சாரங்களைப் பார்த்தேன். கத்திரிக்கோல் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி. பூரட்டாதின்னா பேங்க். சூரியன் வெப்பத்தை சாணைக்கல்லில் விஸ்வகர்மா வெப்பத்தை குறைத்ததால் விஸ்வகர்மா நட்சத்திரம் சித்திரை. சித்திரைன்னா வயல். அதாவது வந்தவர் வயல் ஒன்றை பேங்க்ல அடகு வச்சி லோன் வாங்கும் விஷயத்தை சொன்னேன் பார்ட்டியோட மூச்சு நின்னு போகாததுதான் மிச்சம். மற்றபடி பேயறஞ்ச மாதிரி ஷாக்காய்ட்டார். பிறகு அவரை கூல் பண்ணி உங்களுக்கு மாசி மாசம் கடைசி வாரம் அதாவது மார்ச் செகண்ட் வீக்ல சூரியன் பூரட்டாதில வர்ற நேரம் லோன் கிடைக்கும்ன்னு சொன்னேன். அவரிடம் இருந்து ஒரு விஷயத்தையும் கேட்காமலையே நானாகவே இவ்வளத்தையும் ஒரு நிமிடத்தில் சொல்லி அசத்தினேன்.

  நன்றி. நன்றி. நன்றி.

  ReplyDelete
 8. என்னை தொடர்பு கொள்ள விரும்புனீங்கன்னா jothidarathna@gmail.com

  ReplyDelete
 9. வணக்கம்,ஒருவருடம் கழித்து ஜோதிட தொடர் ஆரம்பிக்கிறதா எழுதியிருந்தீர்கள்,ஒரு வருடம் ஆயிற்றே நீங்கள் எழுதும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி

  ReplyDelete
 10. sir , please restart your astrology writtings

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.