வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

22 January 2012

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 7

வணக்கம் நண்பர்களே!

நமது தொடர் எப்படி போகிறது.  நன்றாக இருக்கிறதா.  உங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா என்று சில வரிகள் எழுதுங்கள். நான் ஜோதிடம் குறித்து மட்டுமே எழுதுவதால் போரடிக்கிறதா? பல விஷயங்களையும் எழுதலாம் தான் ஆனால் தினமும் எதையாவது எழுத வேண்டும் என்று கடமைக்கு பதிவுகளை எழுதுவதால் ஒரு பயனும் இல்லை.  எனக்கும் போதிய நேரமும் இல்லை.

வளவளவென்று பேசி கொண்டிருப்பதும் பதிவு என்ற பெயரில் தினமும் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பதும் நம்மை நாமே பலவீனப்படுத்தும் செயல்களாகும். 

நமது பேச்சும், எழுத்தும் நமக்கும், பிறர்க்கும் எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் இருக்க வேண்டும். அவற்றின் மூலம் வாசகர்களுக்கு உருப்படியாக எதையாவது சொல்ல முயல வேண்டும்.  அதைவிடுத்து உண்மைக்கு மாறான தகவல்களை சொல்வதும், பரபரப்பான தலைப்புகளை வைத்து பதிவுகள் எழுதுவதும் எதற்காக?. 

வலையுலகில் வெறும் ஹிட்ஸ் பெறுவதற்காக  எதையெல்லாம் எழுதுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது.  எத்தனை பேர் வந்தார்கள், படித்தார்கள் என்பது முக்கியமல்ல.  எத்தனை பேர் அவற்றால் பயனடைந்தார்கள், உபயோகமான தகவல்களை பெற்றார்கள் என்பதே முக்கியம்.

மனுஷனா பொறந்தா நாலு பேருக்கு நல்லதை செய்யனும்.

அட நல்லது செய்ய முடியலைன்னாலும் பரவாயில்லை கெடுதலையாவது செய்யாமல் இருக்கனும்.

ஒன்றுமே செய்ய முடியலையா? ஒரு செடியையாவது நட்டு பராமரித்து வந்தால் பிறர்க்கு நிழலையாவது கொடுக்கும்.

இந்த வசனத்தை ஒரு திரைப்படத்தில் கேட்டதாக ஞாபகம்.

அதைவிடுத்து எல்லார்க்கும் பொல்லானாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் கள்ளானாம் நாடு - என்று வாழ்வதால் யாருக்கு என்ன பயன்.

சமுதாயத்தில் நாம் பயிராக வளராவிட்டாலும் களையாக, முள்ளாக வளர்ந்து பிறர்க்கு துன்பத்தை தரக்கூடாது.

எதோ என் மனதில் சரியெனப்பட்டதை எழுதினேன்.  பொருத்தருள்க.

சரி நமது தொடருக்கு வருவோம்.

சென்ற பதிவுகளில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய்,  தன-களத்திராதி சுக்கிரன் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அமரும் போது எப்படி பலனளிப்பார்கள் என்று பார்த்தோம்.

இந்த பதிவில் 3, 6-க்குடைய புதன் தரும் பலன்களை பார்க்கலாம்.

மேஷ லக்னத்திற்கு மறைவிட ஸ்தானமான 3-க்கும் மற்றொரு மறைவிட ஸ்தானமான கொடிய பாவமான 6-க்கும் அதிபதியாக புதன் வருகிறார்.


3-ம் இடமானது இளைய சகோதரம், தைரியம், வீரியம், முயற்சி, வலது காது, சிறு பிரயாணங்கள், ஆபரணங்கள், ஆளடிமை, எழுத்தாற்றல், பத்திரிக்கை, புத்தகங்கள் மற்றும் தொலைதொடர்புகள் முதலியவற்றை குறிப்பிடும் பாவமாகும்.

6-ம் இடமானது நோய், கடன், பகை, வம்பு, வழக்குகள், துன்பம், போட்டிகளில் வெற்றி, பணியாட்கள், பணிபுரியும் நிலை முதலியவற்றை குறிப்பிடும்.

எனவே 3-ம் இடத்தின் காரகத்துவத்தின் படி அரை சுபன், 6-ம் இடத்தின் காரகத்துவத்தின்படி முழு பாவி   எனவே புதன் மேஷத்தாருக்கு மிகவும் துன்பத்தை தருபவராகிறார்.

எனவே மேஷ லக்னத்திற்கு புதனானவர் துன்பத்தை தரும் பாவியாகிறார்.


3-ம் பாவத்தின் காரகத்துவங்கள் நம் அனைவருக்கும் மிக முக்கியமானது.  தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது பழமொழி.  தைரியம் வீரம் இல்லாமல் கோழையாக வாழ்வதை யாரும் விரும்ப மாட்டார்கள்.  அதிலும் வீரியம் இல்லாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.  பல் புடுங்கிய பாம்பு தான்.

இவற்றுள் 6-ம் பாவமே அதிக கெடுபலன்களை தரக்கூடியதாகிறது.   இந்த பலன்களை தரும் புதன் மேஷத்தாருக்கு மிகவும் துன்பத்தை தருபவராகிறார்.

ஆக மிக முக்கியமான ஸ்தானங்களுள் ஒன்றான 3-மிட ஆதிபத்யம் மேஷ லக்ன பகைவரான புதனிடம் வருகிறது.


எனவே புதன் பலம் பெற வேண்டும்.  புதன் பாதிக்கப்பட்டால், பகை நீசம் அடைந்தால் 3-மிட பலன்களை பெற ஜாதகர் அல்லாட வேண்டும்.


சரி புதன் பலம் பெற வேண்டுமென்கிறீர்களே.  அப்படியானால் ஆட்சி, உச்சம் பெறலாமா? என்றால் அதிலும் சிக்கல் இருக்கிறது.


என்னய்யா சிக்கல், விக்கல் என்கிறீர்.  என்ன சிக்கல் என்று சொல்லும்.


புதன் 6-க்கும் ஆதிபத்யம் பெறுகிறாரே.  அவர் பலம் பெற்றால் தீய பலன்கள் அல்லவா நடக்கும்.


அப்புறம் எப்படிதான் இருக்க வேண்டும்? என்னதான் நடக்கும்?


அதை நாம் தீர்மானிக்க முடியாது.  நமக்கு அமைந்துவிட்ட கிரகநிலைகளை நாம் எப்படி மாற்ற முடியும்.  அனுபவித்துதான் ஆக வேண்டும். எல்லாம் வினைப்பயன்.


ஜோதிடத்தில் இந்தமாதிரி இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்களை கணிப்பது மிகவும் கடினமான செயல். 


ஒரு கிரகம் செய்யும் காரகத்துவ பலன்கள், ஆதிபத்ய பலன்களை சரியாக கணித்து சொல்வதே பெரிய காரியம். இங்கு இரண்டு ஆதிபத்யம் மற்றும் அதன் காரகத்துவம் என்று வருகிறது. 


மேலும் பார்வை, சேர்க்கை என்று வந்தால் அதையும் கவனிக்க வேண்டும்.  அப்புறம் நட்சத்திர சாரம் எது என்றும் பார்க்க வேண்டும்.  கோச்சாரம் என்று ஒன்றிருக்கிறது.


இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சீர்தூக்கி பார்த்த பின்பு அனுபவத்தில் அக்கிரகம் எத்தகைய பலன்களை தருகிறது என்று நாம் கவனித்து பலன்கள் சொல்ல வேண்டும்.


இதெல்லாம் நடக்கிற காரியமாய்யா?


அதனால் தான் ஜோதிடம் சொல்வதற்கு நல்ல அறிவும், ஞாபக சக்தியும், அவற்றை தகுந்த சமயத்தில் பயன்படுத்த தேவையான சமயோசித புத்தியும் அவசியம் தேவை.  இவைகள் இல்லாமல் ஒருவர் ஜோதிடம் சொன்னால் அரைகிணறு தாண்டிய கதைதான்.


மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் புதன் அமரும் போது எப்படிப்பட்ட பலன்களை தருவார்.


முன்பு எனது நினைவில் கொள்ள வேண்டிய ஜோதிட விதிகள் என்ற பதிவில் கிரகங்கள் ராசிகளில் எவ்வாறு நட்பு, பகை, சமம் முதலியவற்றை கணக்கிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.


அதாவது கிரகங்கள் தங்களது மூலத்திரிகோண ராசிக்கு 2-12, 4-5, 8-9 ஆகிய ராசிகள் நட்பு ராசிகளாகும்.  ஏனைய ராசிகள் பகையாகும்.


கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்யங்கள் இருப்பதனால் ஒரு வீட்டில் நட்பாகவும் மற்றோர் வீட்டில் பகையாகவும் அமைந்தால் அதனை சமம் என்று கொள்ள வேண்டும்.


அந்த விதியின் அடிப்படையில் புதனின் மூலத்திரிகோண ராசி கன்னியாகும்.


மேஷமானது கன்னிக்கு 8-ம் ராசியாக வருகிறது.  எனவே விதிப்படி நட்பு என வரும்.  ஆனால் செவ்வாயின் மற்றொரு ராசியான விருச்சிகம் கன்னிக்கு 3-ம் ராசியாக வருகிறது. எனவே விதிப்படி பகை என வரும்.


ஆக புதனானவர் செவ்வாயின் ஒரு வீட்டில் நட்பும் மற்றொரு வீட்டில் பகையும் பெறுவதால் இரண்டு வீடுகளிலும் சமம் என்ற நிலையில் பலத்தை பெறும்.


எனவே புதன் மேஷத்தில் அமரும் போது சமம் என்ற அளவில் இருப்பார்.


மேஷ லக்னாதிபதியான செவ்வாய்க்கு புதன் கடும் பகை கிரகம்.  ஆனால் புதன் செவ்வாயை சமமாகவே கருதுகிறார். 


நீ அறிவாளியாக இருந்தாலும் என்னை வீழ்த்த முடியாது உன்னை எனக்கு சமமாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்ப்பரிக்கிறார் செவ்வாய்.


ஆனால் புதன் செவ்வாயிடம் நீ வேண்டுமானால் உடலளவில் பலசாலியாக இருக்கலாம்.  ஆனால் எம் மதிநுட்பத்திற்கு முன்பு உம்பலம் எம்மிடம் எடுபடாது ஓய்! என்கிறார்.


புத்திசாலி - பலசாலி இவர்களுள் யார் பெரியவர் நீங்களே சொல்லுங்களேன்!.


கல்வியா? வீரமா? எது சிறந்தது.


இரண்டும் சிறந்தது என்றால் புதன் சொல்வது போல சமம் என்பது தானே சரி.


ஆனால் ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது போல செவ்வாய் புதனின் வீடுகளில் பகைத்தன்மையோடு தான் பலனளிக்கிறார்.


மேஷத்தில் புதன் சமம் என்ற அளவில் பலனளிக்கிறார் என்று ஜோதிட விதிகள் சொன்னாலும் புதன் சமம் என்று சொல்லி சமாளிக்கிறாரே தவிர மனதில் செவ்வாயை சரியான சமயத்தில் போட்டு தள்ளிவிட பார்ப்பார்.  மேலும் புதன் பெற்ற ஆதிபத்யங்களும் மேஷத்திற்கு சாதகமாக இல்லை.


குருவும், புதனும் லக்னத்தில் அமரும் போது திக்பலம் பெறுகின்றனர்.  அதாவது கிழக்கில் பலம் பெறுகின்றனர்.

அந்த வகையில் புதன் திக்பலம் பெற்றுவிடுகிறார்.  மேலும் லக்னம் என்பது திரிகோணம், கேந்திரம் ஆகிய இரண்டும் இணைந்த வீடு எனவே லக்னத்தில் அமரும் கிரகமும் பலமாக இருக்கும்.

ஆக பலம் பெற்ற புதன் தீய ஆதிபத்யங்களை பெற்று லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? சொல்லுங்கள் பார்ப்போம்!

இங்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது.  இயற்கையில் புதன் ஒரு பலமில்லாத கிரகம்.  அரை சுபன், அரை பாவி.  அதாவது புதன் தன்னோடு சேரும் கிரகத்திற்கு ஏற்றவாறு தனது தன்மையை மாற்றிக்கொள்வார்.  சுபனோடு சேர்ந்தால் சுபனாகிவிடுவார்.  பாவியோடு சேர்ந்தால் பாவியாகிவிடுவார்.  தனித்த புதன் அவ்வளவாக பலமில்லை.  எனவே புதனோடு சேரும் கிரகத்தையும் கவனித்து பலன் சொல்ல வேண்டும்.  பெரும்பாலும் புதனுடன் சூரியன் அல்லது சுக்கிரன் சேர்ந்து காணப்படும்.  இவை உள்வட்ட கிரகங்கள்.


லக்னத்தில் புதன் இருந்தால் இளமையான தோற்றம் இருக்கும்.  நடுத்தரமான உயரம் இருக்கும்.  நல்ல பேச்சாற்றல் மிக்கவராக நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருப்பார்கள்.  காதல் வயப்படுவார்கள். சாதுர்யமாக செயல்படுவார்கள்.  அதாவது இருக்கும் இடத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்வார்கள்.  ஜாதகர் நல்ல கல்விமான்.  இதெல்லாம் பொதுப்பலன்கள்.


மேஷத்திற்கு என்ன சிறப்பு பலன்.


மேஷத்திற்கு புதன் 3-க்குடையவராகி லக்னத்தில் இருப்பதால் ஜாதகர் சுய முயற்சி உடையவராக இருப்பார்.  தைர்யம் உடையவராக இருப்பார்.  வீர்ய ஸ்தானாதிபதி லக்னம் வந்ததால் ஜாதகர் போகத்திற்கு அடிமையாக இருப்பார்.  3-மிடம் இளைய சகோதரரைக் குறிப்பதால் ஜாதகரே குடும்பத்தில் இளையவராக இருப்பார் அல்லது இளைய சகோதரரின் அன்பை பெற்றவராக இருப்பார்.


அவ்வாறே 6-க்குடைய புதன் லக்னம் வந்ததால் நோய், கடன், பகை முதலியவற்றை ஜாதகர் தேடிக்கொள்வார். 


ஆக புதன் லக்னத்தில் அமரும் போது மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நடைபெறும்.  புதன் பாபக்கிரகங்களுடன் சேர்ந்தால் பலன்கள் தீயதாகவும், சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் சுபமாகவும் இருக்கும்.


சூரியன், வளர் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கை பார்வை புதனை தனது ஆதிபத்ய பலன்களை சுபமாக கொடுக்க வைக்கும். சனி, சுக்கிரன், ராகு, கேதுக்களின் இணைவு, பார்வை பலன்களை தீயதாக்கும்.


மேஷ லக்னாதிபதியாக இருந்தாலும் செவ்வாயின் சேர்க்கை புதனுடன் இருப்பது நல்லதல்ல.  ஏனெனில் செவ்வாய் ஒரு பாபக்கிரகம். அவருக்கு அஷ்டமாதிபத்யமும் வருகிறது.  புதன் ஒரு அரை பாவி மேலும் சத்ரு ஸ்தானாதிபத்யமும் வருகிறது.  எனவே 6,8-க்குரியவர்கள் லக்னத்தில் சேர்வது நல்லதல்ல.  எனவே புதனுடன் செவ்வாய் லக்னத்தில் சேரும் போது புதன் பாபியாகிவிடுகிறார்.  எனவே தனது ஆதிபத்ய பலன்களை தீயதாகதான் தருவார்.


அப்படியானால் சூரியன் சேரலாமா என்று தானே கேட்கிறீர்கள்?  சேரலாம் தவறில்லை.  மேஷத்திற்கு சூரியன் யோகத்தை செய்பவராகிறார்.  எனவே புதனை மேஷத்திற்கு நன்மையை செய்ய வைக்க சூரியனால் முடியும்.


சுக்கிரன், சனி, ராகு, கேது போன்றவர்கள் சேர்ந்தால்?


பொதுவாக கெட்டவர்கள் கூடுவதே தீமை இவர்கள் லக்னத்தில் வந்து டெண்ட் அடித்தால்  ஜாதகரை ஒழித்துவிடாதா?

சுக்கிரன் சுபனானாலும் மாரகாதிபதி.  சனி பாபி மற்றும் பாதகாதிபதி இவர்கள் சேர்க்கை புதனுக்கு கொண்டாட்டம் தான்.  தனது எதிரியான செவ்வாயின் வீட்டில் இவர்களுடன் சேர்ந்த புதன் மேஷ லக்னத்தாரை பழிவாங்கிவிடும்.   ராகு, கேதுக்கள் செவ்வாயின் நிலைக்கு ஏற்றபடி புதனுடன் சேருவதால் பலன் தருவார்கள் என்றாலும் கெடுபலன்களே தருவர்.


இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் போது நன்றாக விளையாடுவார்கள்.  ஆனால் வெளிநாட்டில் விளையாடும் போது சொதப்பி விடுவார்கள்.  ஏனெனில் உள்நாட்டில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் கரகோஷமும் அதிகம் இருக்கும் அது அவர்களுக்கு உற்சாகத்தை தரும்.  வெளிநாட்டில் அப்படியில்லை.

அவ்வாறுதான் எனது பதிவுகளுக்கு நிங்கள் கொடுக்கும்  வரவேற்பையும், கருத்துகளையும் கொண்டே என்னால் மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை உங்களுக்கு அளிக்க முடியும். என்னை தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தும்.  எனவே உங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் தயங்காமல் எழுதுங்கள்

சரி நண்பர்களே! இங்கு பல்வேறு விஷயங்களை விளக்கமாக அலசியதால் பதிவு நீண்டுவிட்டது.  எத்தனை பேர் பெரிய பதிவுகளை பொறுமையுடன் படிப்பார்கள் என்று தெரியவில்லை.  எனவே தொடர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.  

15 comments:

  1. //நமது தொடர் எப்படி போகிறது. நன்றாக இருக்கிறதா. உங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா என்று சில வரிகள் எழுதுங்கள். நான் ஜோதிடம் குறித்து மட்டுமே எழுதுவதால் போரடிக்கிறதா? ///பாஸ் நீங்க இப்படில்லாம் கேட்கலாமா ? உங்க பதிவை யாரவது குறை சொல்லமுடியுமா ?
    ஒருத்தருக்கென்ன என் போன்ற நிறையபேருக்கு உங்கள் எழுத்துக்கள் நன்மை செய்கிறது.
    அந்த விதத்தில் நாங்கள் உமக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் . மிக்க நன்றி !
    பொதுவா எல்லாரும் பூச்சண்டிகாட்டிக்கொண்டு பதிவுகள் எழுதும்போது தனக்கு தெரிந்தவற்றை வெளிப்படையாய் எழுத உங்களை போன்ற சிலபேர்களால்தான் முடியும்.
    பதிவுகள் மிக அருமை ! ஒருஒரு நாளும் காத்துகிடக்கிறேன் உங்கள் பதுவுகளுக்காய் . புது பதிவு கண்டால் மனம் கொண்டாட்டம்படுகிறேன் . அந்த மகிழ்ச்சி உங்களைத்தானே சேரும் .. நீங்கள் சொல்பவை பெரும்பாலும் நடைமுறையிலும் சரியாகத்தான் வருகிறது . நீங்கள் தொடர்ந்து எழுத கடவுள் ஆற்றல் தர வேண்டுகிறேன் அன்புடம் பெருமாள் .சு
    அப்புறம் அந்த செவ்வாய் அஸ்தமனம் விஷயம் கேட்டுஇருந்தனே? என்னாச்சி பாஸ் மறந்துவிட்டிரா ? நேரமில்லையா ? பரவாயில்லை நேரமிருக்கும்போது சொல்லுங்கள்.இன்னொன்று ! இப்பல்லாம் பெருவாரியான மக்கள் ஜோதிடத்தை அறிவுபூர்வமாக நம்புகிறார்கள் . (இளையோர் முதியோர் படித்தவர் படிக்காதவர் )அதனால ஜோதிடத்தைபற்றியே எழுதினாலும் விருப்பமே ! முக்கியமா எனக்கு ஜோதிடத்தைபற்றிதான் வேணும்.

    ReplyDelete
  2. ////அவ்வாறுதான் எனது பதிவுகளுக்கு நிங்கள் கொடுக்கும் வரவேற்பையும், கருத்துகளையும் கொண்டே என்னால் மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை உங்களுக்கு அளிக்க முடியும். என்னை தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தும். எனவே உங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் தயங்காமல் எழுதுங்கள் ////

    அண்ணே....நீங்க சொல்லுற அனைத்து விதிகளும் நீங்க எழுதறத பார்த்தா மேஷ லக்கனத்துக்கே ஒரு 25 பதிவு தேறும் போல...அப்போ சுமாரா 25 * 12 =300பதிவு எழுதணும்.....மாதம் பத்து பதிவு என்றால் சுமார் 3 வருடங்கள் ஆகும்.........அதுவும் இது எல்லாம் பொது பலன்கள் தான்....

    அப்போ மீன லக்கன ஜாதகர் வாசகர் என்றால் சுமார் 2 வருடத்துக்கு மேலாக வெயிட் செய்யணும்.....

    நான் விதி முறைகளை ஆவன படுத்துகிறேன் என்று நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நீங்கள் செய்வது சரி....

    ஆனால் வாசகர் களிடம் இருந்து வரவேற்பை எதிபார்த்தால் இந்த நடை சரி பட்டு வராது.....(இதே நான் மேஷ லக்கினம் என்பதால் ஆர்வமாக படிக்கிறேன்....மற்ற லக்கினம் பற்றி நீங்கள் பேச ஆரம்பித்து விட்டால் ....இந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டேன்)

    நீங்கள் சோதிடருக்காக மட்டும் எழுதுகிர்களா அல்லது வாசகர்களுகாகவா என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்......


    வேட்டை மாதிரி மசாலா படமா தர போறீங்களா இல்லை அவார்டு படமா தர போறீங்களா ....???

    அவார்டு படம் எடுத்து புட்டு அய்யோ என் படத்துக்கு (பதிவுக்கு) கூட்டம் இல்லையே நு புலம்ப கூடாது....

    அப்போ வரட்டா :)

    ReplyDelete
  3. ////அவ்வாறுதான் எனது பதிவுகளுக்கு நிங்கள் கொடுக்கும் வரவேற்பையும், கருத்துகளையும் கொண்டே என்னால் மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை உங்களுக்கு அளிக்க முடியும். என்னை தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தும். எனவே உங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் தயங்காமல் எழுதுங்கள் ////

    அண்ணே....நீங்க சொல்லுற அனைத்து விதிகளும் நீங்க எழுதறத பார்த்தா மேஷ லக்கனத்துக்கே ஒரு 25 பதிவு தேறும் போல...அப்போ சுமாரா 25 * 12 =300பதிவு எழுதணும்.....மாதம் பத்து பதிவு என்றால் சுமார் 3 வருடங்கள் ஆகும்.........அதுவும் இது எல்லாம் பொது பலன்கள் தான்....

    அப்போ மீன லக்கன ஜாதகர் வாசகர் என்றால் சுமார் 2 வருடத்துக்கு மேலாக வெயிட் செய்யணும்.....

    நான் விதி முறைகளை ஆவன படுத்துகிறேன் என்று நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நீங்கள் செய்வது சரி....

    ஆனால் வாசகர் களிடம் இருந்து வரவேற்பை எதிபார்த்தால் இந்த நடை சரி பட்டு வராது.....(இதே நான் மேஷ லக்கினம் என்பதால் ஆர்வமாக படிக்கிறேன்....மற்ற லக்கினம் பற்றி நீங்கள் பேச ஆரம்பித்து விட்டால் ....இந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டேன்)

    நீங்கள் சோதிடருக்காக மட்டும் எழுதுகிர்களா அல்லது வாசகர்களுகாகவா என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்......


    வேட்டை மாதிரி மசாலா படமா தர போறீங்களா இல்லை அவார்டு படமா தர போறீங்களா ....???

    அவார்டு படம் எடுத்து புட்டு அய்யோ என் படத்துக்கு (பதிவுக்கு) கூட்டம் இல்லையே நு புலம்ப கூடாது....

    அப்போ வரட்டா :)

    ReplyDelete
  4. வாங்க பெருமாள்சிவன்.

    உங்கள் அன்பிற்கு நன்றி. உங்களுக்கு ஜோதிடத்தின் மீது உள்ள ஆர்வம் என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது.

    ///அப்புறம் அந்த செவ்வாய் அஸ்தமனம் விஷயம் கேட்டுஇருந்தனே? என்னாச்சி பாஸ் மறந்துவிட்டிரா ? நேரமில்லையா ? ////

    அப்படியா? நான் மறந்துவிட்டேன் போலும். நீங்கள் குறிப்பிடும் கிரக நிலைகளை வைத்து சொன்னால் வேறு நிலைகளால் மாறிவிட வாய்ப்பு இருக்கிறதே. உங்கள் கேள்விகளை முழு விபரங்களுடன் மின்னஞ்சலில் அனுப்புங்கள். பதில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  5. வாங்க கிருஷ்ணா!

    ////அண்ணே....நீங்க சொல்லுற அனைத்து விதிகளும் நீங்க எழுதறத பார்த்தா மேஷ லக்கனத்துக்கே ஒரு 25 பதிவு தேறும் போல...அப்போ சுமாரா 25 * 12 =300பதிவு எழுதணும்.....மாதம் பத்து பதிவு என்றால் சுமார் 3 வருடங்கள் ஆகும்.........அதுவும் இது எல்லாம் பொது பலன்கள் தான்....

    அப்போ மீன லக்கன ஜாதகர் வாசகர் என்றால் சுமார் 2 வருடத்துக்கு மேலாக வெயிட் செய்யணும்.....
    ////

    ஆமாம் நீங்கள் சொல்லும் எண்ணிக்கைக்கு மேல்கூட பதிவுகள் இருக்கலாம். நாட்களும் கூட அதிகம் ஆகலாம்.

    கிருஷ்ணா! நான் எழுதறது தலைப்பு தான் மேஷ லக்னமே தவிர இந்த விஷயங்கள் அனைத்தும் பொதுவாக ஜோதிடத்தை கற்க விரும்புபவர்களுக்கான விஷயங்களை உள்ளடக்கியது தான்.

    நம்மில் பலரும் வெறும் ராசி பலன்களை படிப்பது போன்று அவர்களது ஜாதகத்திற்கு, கிரக நிலைகளுக்கு மட்டும் எனது பதிவுகளை படித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

    ஜோதிடத்தை கற்க விரும்பும், பலன் கூற விரும்பும் ஆர்வலர்களுக்கான பதிவுகள் இது.

    ஒரு லக்னம் என்று எடுத்துக்கொண்டால் எந்தெந்த விஷயங்களை பார்க்க வேண்டும். எப்படி கணக்கிட வேண்டும். எந்தெந்த கிரகங்கள் அந்த லக்னத்திற்கு எங்கிருந்தால் நன்மை, தீமைகளை செய்கின்றன போன்ற விஷயங்களையெல்லாம் வாழைப்பழத்தை உரித்து கொடுப்பது போல அலசி எழுதுகிறேன்.

    இதை அந்தந்த ராசிகாரர்கள் தான் படிக்க வேண்டும் என்று இருந்தால் எனது முயற்சியே வெற்றி பெறாது.

    ////நீங்கள் சோதிடருக்காக மட்டும் எழுதுகிர்களா அல்லது வாசகர்களுகாகவா என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்......////

    ஒரு வளரும் இளம் ஜோதிடர் எந்த லக்னத்திற்கு வேண்டுமானாலும் பலன்களை சொல்ல தயாராக இருக்க எமது பதிவுகள் ஒரு அடிப்படையை கொடுப்பதாக இருக்கும்.

    இந்தமாதிரியான விஷயங்களை நான் அறிந்து கொள்ள எப்படியெல்லாம் அலைய நேர்ந்தது. ஏகப்பட்ட குப்பை புத்தகங்களையெல்லாம் படித்து குழம்பியிருப்பேன். ஆனால் முடிந்தவரை என்னில் தெளிவான விஷயங்களை பதிவுகளாக அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது தான் இந்த தொடர்.

    ////அவார்டு படம் எடுத்து புட்டு அய்யோ என் படத்துக்கு (பதிவுக்கு) கூட்டம் இல்லையே நு புலம்ப கூடாது....////

    இவ்வளவு விஷயங்களை வைத்துக்கொண்டு காட்ட முடியாத மசாலா படங்களா? தலைப்பை மாற்றி மாற்றி வைத்து பிண்ணி பெடலெடுத்துவிடலாம் தான். ஆனால் சொல்ல வந்ததை நோக்கத்தை மறந்து வேறு வழியில் சென்று விடக்கூடாது என்று நினைப்பதால் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்துவிடுகிறேன்.

    கூட்டம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி சிங்கம் பசி அடங்கும் வரை முன் வைத்த காலை எப்போதும் பின்வைப்பதில்லை. பார்த்துடலாம்......... :) :)

    ReplyDelete
  6. ///////கூட்டம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி சிங்கம் பசி அடங்கும் வரை முன் வைத்த காலை எப்போதும் பின்வைப்பதில்லை. பார்த்துடலாம்......... :) :)
    /////

    KEEP IT UP :)

    ReplyDelete
  7. தானே பதிவு எழுதி, தானே போலி கமெண்டும் இட்டு, தன்னை தானே திட்டியும்,புகழ்ந்தும் கமெண்ட் எழுதும் போலி மனிதருக்கிடையில், உங்கள் தெளிவான ,கோர்வையான பதிவு, உபயோகமாக இருக்கிறது
    . சரக்கு வற்றி போன, தினமும் எழுதும் பதிவரை விட கோடை மழை போல பொழியும் உங்கள் பதிவும், எங்களை போல ஜோதிடம் கற்பவருக்கு (ஆரம்ப நிலை) ரொம்ப உதவியாக உள்ளது
    .

    ReplyDelete
  8. வாங்க ஸ்வாமி. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

    நம்ம பதிவு பிடிச்சிருக்கா. ஏதுனா விளக்கம் கொடுக்கனுமா? அல்லது இன்னும் சிறப்பாக இருக்க ஏதேனும் எழுதலாமான்னு ஆலோசனை சொன்னால் நன்று. எதுக்கு மத்தவுங்களை வம்புக்கு இழுக்கனும். விட்ருங்க.

    ReplyDelete
  9. நான் யாரையும் குறிப்பிடவில்லை முத்து. உங்கள் முதல் பத்தியில், சமுதாயத்தில் பயிராக இல்லாவிட்டாலும் களையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எழுதியது என் ஆதங்கத்தை அதிகப்படுத்திவிட்டது. உங்க லக்ன பாடம் padithaal நேராக போய் எக்ஸாம் எழுதலாம். அருமை. சில உதாரன
    ஜாதகங்களும் கொடுக்கலாமே.

    ReplyDelete
  10. ///சில உதாரன
    ஜாதகங்களும் கொடுக்கலாமே.///

    கண்டிப்பாக உதாரண ஜாதகம் கொடுத்து அலசுவோம் ஸ்வாமி. நமது நண்பர் சுதீஷ் இப்போதே முன்பதிவு செய்துவிட்டார் :)

    ReplyDelete
  11. Ver Useful one for the beginners in this field. Please keep up your service. Waiting for the "Ayvuth thodar - Mithuna Lagnam" very eagerly so that I can learn with my own jadhaga.

    ReplyDelete
  12. This is very useful one for the beginner like me. Keep up your good service. I am eagerly waiting for the "Ayvuth thodar - Mithuna Lagnam", so that I can learn better with my own jadhagam.

    ReplyDelete
  13. என்னுடைய லக்னம் மேஷம்
    MY DOB- 12/07/1982
    TIME 12.49AM
    PLACE - KARUR
    எனக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது , முடிந்தால் உதாரண ஜாதகத்திற்கு இதனையும் பயன்படுத்தவும்.

    ReplyDelete
  14. NAME : T.KARTHICK KUMAR
    DOB : 31.10.1988
    TIME : 06.44 AM
    PLACE OF BIRTH : PATTUKKOTTAI, TAMILNADU

    1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

    2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?
    my mail id: vinko044@gmail.com

    ReplyDelete
  15. NAME : T.KARTHICK KUMAR
    DOB : 31.10.1988
    TIME : 06.44 AM
    PLACE OF BIRTH : PATTUKKOTTAI, TAMILNADU

    1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

    2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

    my mail id: vinko044@gmail.com

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.