வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

16 October 2011

தமிழ்மணம் என்றதொரு சர்வாதிகாரம்.

இந்த உலகில் எல்லோரும் பிறக்கும் போது ஆடையின்றிதான் பிறக்கிறோம். விபரம் தெரிந்த நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்து ஆளாக்கி நமக்கு ஆடைகளை அணிவித்து அழகுபடுத்திப் பார்க்கின்றனர்.

இருப்பவன் இல்லாதவனுக்கு, இயலாதவனுக்கு உதவ வேண்டும் என்ற கடவுளின் எதிர்பார்ப்போ என்னவோ? இந்த பூவுலகில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டும் என்கின்ற வகையில் கடவுள் உயிர்களைப் படைத்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் இருப்பவன் இல்லாதவனுக்கு உதவுகிறானோ இல்லையோ? நிச்சயமாக அவனை மேலும் மேலும் ஒண்டாண்டியாக்குகிறான்.

ஒன்றும் இல்லாமல் இருப்பவன் கூட கையில் நாலு காசு சேர்ந்துவிட்டால் நானும் ஊருல யாருனு காட்டுகிறேன் பார் என்று முஷ்டியை உயர்த்திக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்.

வேலையில்லாதவனுக்கு வேலைகிடைத்தால் போதும் என்கிற மனநிலை, பின்பு நல்ல ஊதியம் கிடைத்தால் போதும் அப்புறம் கிடைக்கின்ற ஊதியத்தைவிட இன்னும் அதிகமாக கிடைத்தால் தேவலாம் என்கிற கவலை, கடைசியில் வேலை செய்யாமலே ஊதியம் கிடைத்தால் எப்படியிருக்கும் என்ற மனநிலை என்று இப்படிதான் அந்த மனிதனை கொண்டு போகும்.

கிட்டதட்ட தமிழ்மணம் என்றதொரு திரட்டியின் நிலையும் இப்படிதான் சென்றுக்கொண்டிருக்கிறது..

 முதலில் இவர்கள் தங்கள் தளத்தை பிரபலமாக்குவதற்காக சும்மா பதிவெழுதிக்கொண்டிருந்த பதிவர்களிடம் சென்று எங்களிடம் வந்து பதிவு செய்யுங்கள் உங்கள் பதிவுகளை பிரபலமாக்குகிறோம் என்று வலியச் சென்று கெஞ்சினார்கள்.  நாலுபேர் கூட்டம் கூடியவுடன் கொஞ்சமாக விளம்பரம் செய்து கல்லாகட்டினார்கள்.  அப்புறம் கூட்டம் அதிகமாக கூடியதும் போட்டிகள் வைத்து மேலும் தங்களை பிரபலமாக்கினார்கள். (அவார்டு தராய்ங்கலாம்லே?! நெத்தியில ஒட்டிக்க வேண்டியதுதான்)

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே பார்த்தார்கள்.  இனிமேல் ஒன்னும் வெட்கப்பட தேவையில்லை என்று நேடியாகவே உண்டியலை குலுக்க ஆரம்பித்துவிட்டார்கள் டொனேசனாம்?! ஆசை யாரை விட்டது?

எல்லாம் சரி சமீபத்தில் திடீரென பதிவர்களுக்கு விதிமுறைகளை கொண்டு வந்து அவர்களை நீக்குவதும், தடைசெய்வதுமாக ஒரே ரகளை நடந்துகொண்டிருக்கிறது.  கேட்டால் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாதாம், சோதிடம் குறித்து எழுதக்கூடாதாம், மோசமான தலைப்பு வைக்க கூடாதாம், அரசியலை விமர்ச்சிக்க கூடாதாம் இப்படியாக ஏகப்பட்ட கண்டிஷன்கள்  பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

ஏன் இவர்கள் தமிழ்மணம் பரப்ப ஆரம்பிக்கும் போதே இப்படிப்பட்ட கண்டிஷன்களுடன் ஆரம்பிக்க வேண்டியது தானே?  அப்போது கீழே கிடந்த குப்பைகளையெல்லாம் தேடி தேடி பொறுக்கியவர்களுக்கு இப்போது கொஞ்சம் காஸ்ட்லி குப்பைகளாக போடுங்கள் பொறுக்குகிறோம் என்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.  இவர்கள் பொறுக்குவதற்கு காசு கொடுத்தால் பொறுக்குவார்களாம்.  போங்கையா நீங்களும் உங்க சேவையும்.

காப்பி-பேஸ்ட் யாருடையதை யார் காப்பி செய்தார்கள் என்று இவர்களுக்கு தெரியுமா?  புஸ்தவத்தை பார்த்து காப்பி செய்து தங்களது பதிவுகளில் எழுதிவிட்டு சொந்தமாக எழுதினேன் என்னை பார்த்து இவன் ஈயடிச்சான் என்று கண்ணை கசக்கினால் இவர்கள் உடனே சூப்பர்மேன் கணக்காக வந்துவிடுவார்கள்.

சோதிடம் குறித்து எழுதக்கூடாதாம்.  ஏன் எழுதக்கூடாது?  அதில் என்ன தவறு இருக்கிறது.  ஒரு மனிதனின் வாழ்வியலை நிர்ணயிக்கின்ற மிக முக்கியமான ஒரு சாஸ்திரம் ஜோதிடம்.  அதை எழுதினால் நீக்கிவிடுவார்களாம்.  படிப்பவர்களுக்கு தெரியும் எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்று.  அதைவிடுத்து சோதிடம் குறித்து எழுதுவதை தடைசெய்ய இவர்கள் யார்? சோதிடத்தை கண்டறிந்த முனிவர்களா? 

சரி யார் யாரை குறித்து எழுதலாம்? என்றால் சினிமாவைப் பற்றி சினிமா விமர்சனம் எழுதலாமா?  கோடிக்கணக்கில் செலவுசெய்து தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள்.  பலர் திருட்டு விசிடி பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறார்கள் படம் மோசம் என்று.  அது மட்டும் சரியா?  இவர்களது அரைகுறை விமர்சனத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்தால் யார் பொறுப்பு?  தமிழ்மணம் தானே திரட்டினார்கள் அவர்கள் கொடுப்பார்களா? இல்லை விமர்சனப் பதிவெழுதிய பதிவர்களிடம் வசூலித்துக் கொடுப்பார்களா?
நடிகைகளை குறித்து கிசு கிசு மட்டும் எழுதலாமா? ஆபாச படங்களை போடலாமா?

அரசியல் குறித்து அவரவர் கருத்துகளை எழுதுகிறார்கள், தவறுகளை சுட்டிக்காட்டுவது ஓட்டுப்போடும், வரிசெலுத்தும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை.  இதை செய்யக்கூடாது அல்லது இப்படி தான் எழுதவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? பதிவர்கள் யாரைப்பற்றி எழுதுகிறார்களோ அவர்கள் பதில் சொல்லட்டும்.  தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கட்டும்,  பொய்யான தகவல்களுக்கு நடவடிக்கை எடுக்கட்டும் இது பதிவர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையில் உள்ளப்பிரச்சினை.  இதில் மணம் பரப்புவர்களுக்கு என்ன வந்தது.  அவர்களது வேலை என்ன பொறுக்கறதை மட்டும் பொறுக்கிவிட்டு போக வேண்டியது தானே?

யார் யாரை திருத்துவது? யாரையும் யாராலும் திருத்தவே முடியாது? அவர்களாக  உணர்ந்து திருந்தினால் மட்டுமே. நாட்டில் இவ்வளவு சட்டங்கள் இருக்கின்றனவே? எங்கே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் நடக்காமலா இருந்துவிட்டது? நீங்கள் சொல்லலாம் சட்டங்கள் இருப்பதால் தான் குற்றங்கள் குறைவாக இருக்கின்றது என்று.


நான் என்ன சொல்கிறேன் என்றால் இதைவிட சட்டங்கள் இல்லாத காலத்திலேயே குற்றங்கள் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்களே?  எப்படி?  அந்தகாலத்தில் மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள்.  உழைத்து பிழைத்தார்கள்.  இறைவனுக்கும், தனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள்.


இன்று சட்டம் போடுகிறேன் என்று எல்லாவற்றையும் மீறிய கதையாகிவிட்டது.  எதை செய்யக்கூடாதோ அதை காசுகொடுத்து செய்தால் தவறில்லை என்றாகிவிட்டது இன்றைய நிலை.  அப்படியென்றால் நேரடியாகவே கையேந்திவிட்டுப் போக வேண்டியது தானே?  எதற்கு தேவையில்லாத பில்டப், உத்தமன் வேஷம் இத்தியாதியெல்லாம்.


திரட்டியென்றால் எங்கள் பதிவுகளை திரட்டி வெளியிடுங்கள், நீங்கள் விளம்பரம் செய்து சம்பாதித்துக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு விளம்பர வருமானம்.  எங்களுக்கு பதிவுகள் மூலம் பிரபலம் இது தானே பதிவுலகின் எழுதப்படாத ஓப்பந்தம்.  அதைவிட்டுவிட்டு இது சரி, இது தவறு என்று நாட்டாமை செய்ய உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.  எழுத்தாளர்களின் எழுத்து சுதந்திரத்தில், கருத்து சுதந்திரத்தில்,  அவர்களின் அறிவாற்றலில், அவர்களின் தேடலில் தலையிட உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. நீங்கள் டொனேசன் கேட்பது கூடத்தான் எங்களுக்கு பிடிக்கவில்லை.  வேண்டாம் என்று சொன்னால் விட்ருவீங்களா?


உண்மையில் பிரதிபலன் எதிர்பாராத பல நல்ல திரட்டிகள் தமிழில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.  இன்ட்லி, தமிழ்10, உலவு போன்றவை மிகவும் பயனுள்ள திரட்டிகளே.  இன்னும் பல திரட்டிகள் இருக்கின்றன.  நம்மைப் போன்ற பதிவர் கேபிள் சங்கரின் யுடான்ஸ் அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கிறதே?! 


மனிதனுக்கு நெருக்கடிகள், தேவைகள் என்று வருகின்ற போதுதான் அவனுடைய உண்மையான பலமே அவனுக்கு தெரியவரும்.  ஒரு கதவை மூடும் போது தான் மற்றொரு வழிக்கு கதவு திறக்கும்.  அந்த வகையில் நீங்கள் செய்வதெல்லாம் எங்களையே நம்பிக்கொண்டிருக்காதீர்கள் உங்களுக்கு தெரிந்த வழிகளில் நீங்கள் போங்கள் என்று எங்களுக்கு வழிகாட்டுவது போல்தான் இருக்கிறது.  இப்படியே போனால் நீங்கள் கடையை சாத்துவதற்கு நீண்டகாலம் ஆகாது.

பூணை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் ஒன்றும் இருண்டுவிடாது.  நாளை மார்க்கெட் போனதுக்கப்புறம் நீங்களே தேடி தேடி வந்து அழைத்தாலும் யாரும் உங்களை சீந்த மாட்டார்கள் என்பதை உணருங்கள்.  இவர்கள் இல்லாவிட்டால் வேறு திரட்டிகள், அவர்களும் இல்லாவிட்டாலும் கூகுளின் ப்ளாக் இருக்கும் வரை நாங்கள் எழுதிக்கொண்டேதான் இருப்போம்.  அட கூகுளே போனாலும் வேர்ட் பிரஸ் போன்று வேறு யாராவது வந்துக் கொண்டேதான் இருப்பார்கள்.  போட்டியில்லைன்னா ஏறிமிதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க புரியுதா?

 நம்ப சூப்பர் ஸ்டார் பாட்ஷா படத்துல ஒரு வசனம் பேசுவாரு ”கண்ணா! இது காசு குடுத்து சேர்த்த கூட்டம் இல்ல! அன்பால தானே சேர்ந்த கூட்டம்” அதுமாதிரி ஒருத்தருடைய எழுத்துகள் வாசகர்களுக்கு பிடிச்சி போயிருச்சுன்னா நீங்க திரட்டினாலும், திரட்டாவிட்டாலும் அவங்க தேடிப்பிடிச்சு வந்து படிச்சிருவாங்க. எந்த ஜில்லாவுல இருந்தாலும் அவங்களால அதை படிக்காம இருக்க முடியாது.  அதுதான் எழுத்துக்கு உள்ள பவரு.



தம்பிகளா! இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. உங்க கண்ணுக்கு தெரியறதும், நீங்க இருக்கறதும் தான் உலகம்னு நினைச்சீங்கன்னா உங்ளைப் போல பெரிய அறிவாளி யாரும் லோகத்துல இல்லே.  இது தகவல் தொழில்நுட்ப புரட்சிகாலம்.  ஆண்டவனே நினைத்தாலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது.  புரியுதா இல்லை இன்னும் எழுதனுமா?  வேணாம் போகப் போக நீங்களே புரிஞ்சிப்பீங்க.  அப்படி புரிஞ்சிகிட்டா நீங்க எதார்த்தவாதி.  புரியலைன்னா மக்கா!! நீங்க ஆணியே புடுங்க வேணாம். மூடிட்டு போறீங்களா  முடிஞ்சா  நாங்களே புடுங்கிக்கிறோம்.

17 comments:

  1. அப்போது கீழே கிடந்த குப்பைகளையெல்லாம் தேடி தேடி பொறுக்கியவர்களுக்கு இப்போது கொஞ்சம் காஸ்ட்லி குப்பைகளாக போடுங்கள் பொறுக்குகிறோம் என்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.//
    அப்படி போடுங்க அருவாளை

    ReplyDelete
  2. உங்களின் இந்த பதிவை என் ப்ளாக்கில் வெளியிட்டுள்ளேன்...நன்றி

    ReplyDelete
  3. வாங்க அண்ணே! தமிழன் ஓசியில் கொடுத்தால் தன்மானத்தை மறந்து எதுவும் கேட்கமாட்டான் என்ற நினைப்புதான் இவர்களது ஆணவத்திற்கு காரணம்.

    தமிழனுக்கு ஆதவில்லாதவனுக்கு ஆதரவு கரம் நீட்டவும் தெரியும். ஆணவக்காரர்களை அடக்கி வைக்கவும் தெரியும் என்பதை காட்ட வேண்டாமா? அதான் பொங்கிட்டோம்.

    எனது பதிவை உங்கள் தளத்தில் லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Your statement very very correct

    ReplyDelete
  5. //இன்று சட்டம் போடுகிறேன் என்று எல்லாவற்றையும் மீறிய கதையாகிவிட்டது. எதை செய்யக்கூடாதோ அதை காசுகொடுத்து செய்தால் தவறில்லை என்றாகிவிட்டது இன்றைய நிலை. அப்படியென்றால் நேரடியாகவே கையேந்திவிட்டுப் போக வேண்டியது தானே? எதற்கு தேவையில்லாத பில்டப், உத்தமன் வேஷம் இத்தியாதியெல்லாம்.
    //

    தெளிவா கேட்டு இருக்கீங்க.தமிழ் மனம் சர்வாதிகாரம் ஒழிக! ஒழிக!
    பேசாம ,இந்த திரட்டிய எல்லோரும் ஒன்று சேர்ந்து கை கழிவி விட்டா தான் இது அடங்கும்.

    ReplyDelete
  6. தேவையான பகிர்வு நண்பா

    நம்மளை என்னவென்று நினைத்து விட்டார்கள்.

    இன்றே தமிழ்மணத்தை மறப்போம்

    ReplyDelete
  7. நல்ல கருத்து.ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  8. //ஒருத்தருடைய எழுத்துகள் வாசகர்களுக்கு பிடிச்சி போயிருச்சுன்னா நீங்க திரட்டினாலும், திரட்டாவிட்டாலும் அவங்க தேடிப்பிடிச்சு வந்து படிச்சிருவாங்க. எந்த ஜில்லாவுல இருந்தாலும் அவங்களால அதை படிக்காம இருக்க முடியாது. அதுதான் எழுத்துக்கு உள்ள பவரு.//

    வணக்கம் நண்பரே..

    இது எனது முதல் வருகை.

    தங்கள் கருத்தினை வரவேற்கிறேன்

    ஓரு திரட்டி வைத்து நடத்துபவருக்குரிய நாகரீகமற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ்மணம் நிர்வாகியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

    இன்று முதல் தமிழ்மணத்தில் இருந்தே விலகிவிட்டேன்

    நன்றி தகவலுக்கு
    நட்புடன்
    சம்பத்குமார்
    www.tamilparents.com

    ReplyDelete
  9. @ என் ராஜபாட்டை"- ராஜா
    @ IlayaDhasan
    @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
    @ வைரை சதிஷ்
    @ R.Ravichandran
    @ சம்பத்குமார்

    எமது தளத்திற்கு வருகையும், கருத்துகளையும் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  10. சகோ.. முதல் தடவ உங்க பதிவுக்கு வரேன்.. முக்கியமான நியாயமான கருத்துக்கள்.. நான் உங்களை வழிமொழிகிறேன்...

    தமிழ்மனத்தில் இருந்து விலகலாம்-னு இருக்கேன்...

    தொடர்ந்து பதிவு எழுதுங்க... கண்டிப்பா வந்து படிக்கறேன் :)

    ReplyDelete
  11. ////சகோ.. முதல் தடவ உங்க பதிவுக்கு வரேன்.. முக்கியமான நியாயமான கருத்துக்கள்.. நான் உங்களை வழிமொழிகிறேன்...

    தமிழ்மனத்தில் இருந்து விலகலாம்-னு இருக்கேன்...

    தொடர்ந்து பதிவு எழுதுங்க... கண்டிப்பா வந்து படிக்கறேன் :)////

    வாங்க சகோ. உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

    மதியாதார் தலைவாசல் மிதியாமை நன்று அவ்வை சொன்னது.

    தமிழ்மணத்திலிருந்து விலகுவது என்பது உங்கள் முடிவு.

    அடிக்கடி வருகை தாருங்கள். சந்திப்போம்.

    ReplyDelete
  12. சார்,fact...fact....fact....புதுசு சார் நானு,நாலு நாளா முயற்சி செய்தும் தமிழ்மணத்தில் என்னோட பதிவை இணைக்க முடியலை.udanze,tamil10, இது ரெண்டிலேயும் உடனே பதிவு போட்டாச்சு..உங்களை மாதிரி பெரிய பதிவர்களிடம் voteம் வாங்கியாச்சு.தைரியமான பதிவு சார்.

    ReplyDelete
  13. அண்ணே, எப்படி இத்தனை நாளா உங்க ப்ளாக் பக்கம் வராம விட்டேன்னே தெரியலை, ரொம்ப தைரியமான பதிவு, நானும் தமிழ்மணம் பக்கம் போறத விட்டுடறேன். தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.