வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

22 October 2010

ஜோதிடம் பற்றிய சில கருத்துகள்

அனைவருக்கும் வணக்கம்,

     ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்றவைகள் இயல்பாக வந்து போகின்றன.  அவற்றை அனுபவிப்பதால் தான் வாழ்வில் சுவை ஏற்படுகிறது.  இவற்றுள் சிலவற்றுக்கு நாமே பொறுப்பாகிறோம்.  பல விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

  உண்மையில் நம் வாழ்வில் நாம் அடையும் பலாபலன்கள் அனைத்திற்குமே நாம் தான் காரணமாகிறோம்.  சில பலன்கள் நாம் இப்பிறவியில் செய்தவற்றிற்கேற்ப அமையும் சில பலன்கள் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்றாற் போல் இப்பிறவியில் நாம் அடைகிறோம்.  நம்முடைய பிறப்பும் இறப்பும் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லை.  ஆனால் வாழ்வின் இடைப்பட்ட காலத்தில் நாம் நமது விருப்பத்தின் படி வாழ முடியுமா?  எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்றால் நாம் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்க வேண்டியது தானா?

     இங்கு தான் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.  இறைவன் மனிதனுக்கு மட்டுமே ஆறறிவினை கொடுத்துள்ளான்.  அந்த ஆறாவது அறிவினை நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப வாழ்வில் சில விஷயங்களை நமது விருப்பத்திற்கேற்றாற் போல் மாற்றிக்கொள்ள இயலும் என்பது எனது கருத்து.  எப்படியெனில் திரைப்படத்தினை நாம் டிவிடியில் பார்க்கும் போது ரிமோட் கன்ட்ரோல் கொண்டு நமக்கு தேவையற்றதை வேகமாக ஓட்டிவிடுவதை போல என எடுத்துக் கொள்ளளாலம்.

        ஆறாவது அறிவினால் என்ன பயன்? என்று யோசித்து பார்க்கும் போது தான் மனிதன் தனது விதியை வெல்ல முற்படுகிறான்.  அவ்வாறு வெல்ல முயலும் போது அவனுக்கு கிடைத்த பொக்கிஷங்களே ஜோதிடம், மாந்தீரீகம், இன்ன பிற 64 கலைகள் ஆகும்.  நிச்சயமாக சித்தர்கள் மரணத்தை வென்றவர்கள் எனில் அவர்களுக்கு மட்டும் எப்படி விதியை வெல்ல முடிந்தது.  அவர்களும் நம்மைப்போன்ற மானிடராக தானே பிறந்து வளர்ந்தனர்.  

         இங்குதான் முயற்ச்சி முன்நிற்கின்றது.  இடைவிடாத முயற்ச்சியால் தான் சித்தர்கள் மரணத்தை வென்றனர்.  அதுமட்டுமல்லாமல் மற்றவர்களாலும் அவ்வாறு முடியும் என்று தான் தமது வழிமுறைகளை பாடல்களாக நம்மிடம் விட்டுச் சென்றுள்ளனர். 

    சித்தர்கள் கூறாத விஷயங்களே இல்லை.  நாமும் முயன்றால் நிச்சயமாக நம்மாலும் முடியும்.  இப்பிறவியில் முடியாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது விட்ட குறை தொட்ட குறையாக நம்மை தொடர்ந்து வந்து நம்மை வழிநடத்தும்.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் நன்மையான செயல்களே, நன்மை செய்ய முடியாத சூழ்நிலையில் தீமை செய்யாதிருத்தலே நம்மை இறைவனிடம் கரைசேர்க்கும்.

         ஆகவே ஜோதிடம் என்பது  மனிதன் தனது விதியமைப்பை தெரிந்து கொள்ள ஏற்படுத்திய வழிமுறையே ஆகும்.  ஜோதிடத்தின் வாயிலாக நமது முன்னோர்கள், முனிவர்கள், சித்தர்கள் கூறிய வழிகளில் கிரகங்களுக்கு பரிகாரம், இறைவழிபாடு, தான தர்மங்கள் முதலிய சாந்திகளை செய்து தீமையான பலன்களை நல்ல பலன்களாக மாற்றி கொள்ளமுடியும்.

         ஒரே நேரத்தில் பல விஷயங்களை கூறினால் படிப்பவர்களுக்கு நினைவில் நிற்காது.  எனவே இதன் தொர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.  தங்களுடைய மேலான கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக தெரிவியுங்கள் அதுவே எனக்கு மேலும் ஊக்கத்தை தரும்.  நன்றி்.

உங்களைப் போலவே தேடலில் உள்ள மாணவன்
S. மணிகண்டன்.  மின்னஞ்சல் முகவரி : manidakshu@gmail.com

8 comments:

 1. thankyou thankyuou good article

  ReplyDelete
 2. சித்தர்கள் மந்திரத்தில் மாங்காய் பழுக்கவைக்கவில்லை. அனைத்தும் அறிவியல்.
  அவர்கள் அல்லும் பகலும் கடினமாக உழைத்து,பல சோதனைகளைச் செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
  அதை நமக்கு நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியுள்ளனர்.
  முற்பிறவி,கர்மபலன் என்பது கட்டுக்கதையே,அதற்கு வேறு விளக்கம் உள்ளது.

  ReplyDelete
 3. SAS அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 4. திரு. tamilan அவர்களுக்கு எனது நன்றி தாங்கள் அனுப்பியுள்ள சுட்டிகளை பக்கங்களை முழுவதுமாக படித்தபின் உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 5. guna அவர்களுக்கு தாங்கள் பாராட்டியமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. //ராவணன் said...
  சித்தர்கள் மந்திரத்தில் மாங்காய் பழுக்கவைக்கவில்லை. அனைத்தும் அறிவியல்.
  அவர்கள் அல்லும் பகலும் கடினமாக உழைத்து,பல சோதனைகளைச் செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
  அதை நமக்கு நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியுள்ளனர்.//

  திரு. ராவணன் அவர்களே தாங்கள் கூறியுள்ளது 100 சதவீதம் முற்றிலும் உண்மையே. சித்தர்களின் உழைப்பும் முயற்சியும் தான் நம் மனித குலத்தை இன்றளவும் அழியாமல் பாதுகாத்து வருகிறது.

  //முற்பிறவி,கர்மபலன் என்பது கட்டுக்கதையே,அதற்கு வேறு விளக்கம் உள்ளது.//

  இந்த உலகில் நடைபெறும் எந்ந நிகழ்வும் காரண காரியமில்லாமல் நடைபெறவில்லை. நம் முன்னோர்கள் கூறிவந்ததில் எந்த தவறும் இல்லை. நாம் முயற்சி செய்தால் அவற்றின் பொருள் விளங்கும்.

  தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.